ஆர்சிபி கேப்டன் விராட் கோலியை ஐபிஎல் தொடலில் 7-வது முறையாக நான் ஆட்டமிழக்கச் செய்தேனா என்பது சகவீரர்கள் என்னிடம் சொல்லும் வரை எனக்குத் தெரியாது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் தற்போது 2-வது இடத்தில் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் மிகக் குறைவாக இருக்கிறது. தொடர்ந்து 3-வது தோல்வியை ஆர்சிபி அணி பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி(7) ரன்னில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சந்தீப் சர்மா பந்துவீச்சுக்கு தொடக்கத்திலிருந்தே கோலி திணறினார்.சந்தீப்சர்மா தனது பந்துவீச்சில் இன்ஸ்விங், அவுட் ஸ்விங், நக்குல் பால் என மாறி, மாறி வீசி கோலியை திணறிடித்தார்.இதனால் பொறுமையிழந்த கோலி எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்தபோது வில்லியம்ஸ்னால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக 12 முறை விளையாடியுள்ள சந்தீப் சர்மா இதுவரை 7 முறை விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதுவரை விராட் கோலிக்கு 68 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார் சந்தீப் சர்மா. அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிகமான விக்கெட் வீழ்த்திய வீரர்களில் சந்தீப் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை ஆர்சிபி அணிக்கு எதிராக 23 விக்கெட்டுகளை சந்தீப் சர்மா கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஒருபேட்ஸ்மேனை தொடர்ந்து அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த வரிசையில் ஜாகீர் கானுக்கு அடுத்தபடியாக சந்தீப்சர்மா இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தோனியை 7 முறை ஜாகீர்கான் அவுட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற சந்தீப் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவரை ஆட்டமிழக்கச் செய்தது மிகவும் சிறப்பானது. விராட் கோலி எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்ததும் வில்லியம்ஸன் பிடித்ததைப் பார்த்து ஓடினேன். ஆனால், அதுவரை கோலியின் விக்கெட்டை 7-வது முறையாக வீழ்த்தியது எனக்குத் தெரியாது. சகவீரர்கள் என்னிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தபின்பு தான் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆடுகளம் சிறிது வறண்டு, கடினமாக இருந்ததால், ஸ்விங் செய்வதற்கு வசதியாக இருந்தது, பந்துவீச்சில் பல்வேறு வித்தியாசங்களை வெளிப்படுத்தி வீசவும் முடிந்தது. எங்களின் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
முதல் ஓவரில் பந்துவீசியபோதே ஆடுகளத்தின் தன்மையை அறிந்து மற்ற வீரர்களுக்கும் உடனடியாகத் தெரிவித்தேன். அவர்களும் அதற்கு ஏற்றார்போல் பந்துவீசினார்கள். பேர்ஸ்டோவுக்கு நான்வீசிய நக்குல் பந்து சிறப்பாக செயல்பட்டது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago