கிறிஸ் கெய்லுக்கு எப்படி ராயல்ஸ் பீல்டர் பராகும், உத்தப்பாவும் புரிதல் இன்மையால் கேட்ச் விடப்பட்டதோ, அதே போல் இன்னொரு அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸுக்கு கிளெம் மேக்ஸ்வெல் நழுவ விட்ட கேட்ச்தான் ராயல்ஸ் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்று முன்னாள் இந்திய தொடக்க வீரரும் கிரிக்கெட் கருத்தாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் அரைசதம் விளாசி எழுச்சித் தொடக்கம் கொடுக்க சஞ்சு சாம்சன், ஸ்மித், பட்லர் வெற்றிகரமாக முடித்து வைத்தனர். இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பிளே ஆஃப் வாய்ப்பில் சிறு ஓட்டை விழுந்துள்ளது.
இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
ராகுல் இன்னிங்ஸ் அந்தத் தருணத்தில் சரியானது போல் தெரிந்தாலும் இப்போது யோசித்துப் பார்த்தால் 41 பந்துகளில் 46 என்பது அவருடைய அதிரடி முறைகளுக்குக் குறைவானதே. அவர் மெதுவாகவே ஆடினார். அவர் இன்னும் கொஞ்சம் ரன் ரேட்டை துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.
» டி20-யின் டான் பிராட்மேன்: கிறிஸ் கெய்லைக் கொண்டாடும் சேவாக்
» டாஸ் தோற்றதுதான் பயங்கரம்; பனிப்பொழிவினால் அவர்களுக்கு பேட்டிங் எளிதானது: கே.எல்.ராகுல் ஆதங்கம்
அதே போல் கிளென் மேக்ஸ்வெல் 6 பந்துகளில் 6 ரன்கள் என்பது போதாது. 12-15 ரன்கள் அவர் எடுத்திருக்க வேண்டும். மேலும் ஸ்டோக்ஸ் பவுலிங்கில் திவேத்தியா பவுண்டரியில் பூரனுக்கு எடுத்த கேட்ச் கிங்ஸ் லெவனுக்கு 10-15 ரன்களைக் குறைத்து விட்டது.
ராஜஸ்தான் பேட்டிங் செய்ய வந்த போது கிளென் மேக்ஸ்வெல் பென்ஸ்டோக்சுக்கு விட்ட கேட்சும் ஆட்டத்தை கிங்ஸ் லெவன் கையில் இருந்து பறித்து விட்டது என்றே கூற வேண்டும், என்றார் ஆகாஷ் சோப்ரா.
ஆனால் மேக்ஸ்வெல் விட்டது அவ்வளவு எளிது என்று கூற முடியாது, சற்றே கடினம்தான், ஷமி பவுன்சரை கெய்ல் கொடியேற்ற பந்து மிட் ஆனில் மேக்ஸ்வெல் ஓடி வந்து டைவ் அடிக்கும் போது பந்து தரையைத் தொட்டு விட்டது. இதை ட்ராப் என்பதைவிட நல்ல முயற்சி என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.
ஆனால் கேட்சஸ் வின் மேட்சஸ், இப்படிப்பட்ட கேட்ச்களை எடுத்தால்தான் எதிரணி நிலைகுலையும். ஸ்டோக்ஸ் அப்போது 12 ரன்களி இருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago