'2021-ம் ஆண்டிலும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டாலும் வியப்பேதும் இல்லை': கவுதம் கம்பீர் கருத்து

By பிடிஐ


2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனியையே கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்தாலும் வியப்படைத் தேவையில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 3 முறை சாம்பியன் 6 முறை 2-வது இடம் என ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியதே இல்லை. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13-வது சீசன் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளியேறியது.

அணியில் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்காதது, அனுபம் எனக் கூறி மூத்த வீரர்களை களமிறக்குவது என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தோனியின் கேப்டன்ஷிப்பும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் காட்டமாக கருத்துக்களால் வசைபாடப்பட்டன.

இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் வீரர்கள் தேர்வில் மிக்பெரிய மாற்றத்தை அணி நிர்வாகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின, அதேபோல கேப்டன்ஷிப்பில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கிரிக்இன்போ சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சிஎஸ்கே அணி சிஎஸ்கே மாதிரியே இருக்கிறது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பது காரணம் என்னவென்றால், தோனிக்கும், அணியின் உரிமையாளர்களுக்கும் நெருக்கமான உறவு, புரிதல் இருக்கிறது. தோனிக்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும அணி உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.

அனைத்துவிதமான பரஸ்பர மரியாதையையும் அணி உரிமையாளர்கள் தோனிக்கு கொடுக்கிறார்கள்.
ஆதலால், 2021-ம் ஆண்டு சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு தோனியே கேப்டனாக தொடர்வார் என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை.

அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்கு தோனியே கேப்டனாகத் தொடர்வார், இந்த முறை இருக்கும் அணியைப் போல் அல்லாமல் வேறுபட்ட அணிக்கு கேப்டனாக இருப்பார். அணி உரிமையாளர்கள் ஏகோபித்த ஆதரவை தோனி பெற்றுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு தோனி செய்திருப்பதும், தோனியை எவ்வாறு அணி உரிமையாளர்கள் நடத்துகிறார்கள் என்பதும், இருதரப்புக்கும்இடையிலான நெருக்கமான உறவு. அதனால்தான் அணிக்காக பங்களிப்பு செய்யும் கேப்டனை ஒவ்வொரு அணியும் இதுபோன்று நடத்துகிறார்கள்.

தோனி தலைமையில் இதுவரை சிஎஸ்கே அணி 3 கோப்பைகளையும், 2 சாம்பியன் லீக் கோப்பைகளையும் வென்றதுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்குப்பின் சிறந்த அணியாக சிஎஸ்கே ஒளிர்கிறது.

அதனால்தான் சிஎஸ்கே அணி நிர்வாகம், தோனியுடனான எங்கள் உறவு தொடரும். இது சாதாரன உறவு அல்ல, பரஸ்பர மரியாதை என்று தெரிவித்துள்ளார்கள். அதனால்தான் சிஎஸ்கே அணிக்கு தோனி மிகவும் விஸ்வாசமாக இருந்து வருகிறார்.

சிஎஸ்கே அணிக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். இதயம், ஆன்மா, வியர்வை, தூக்கமில்லா இரவு என அனைத்தையும் தோனி சிஎஸ்கே அணிக்காக கொடுத்திருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து தோனி கேப்டனாக இருந்தபோது, தோனிக்கு தூக்கமில்லா இரவுகள் தொடர்ந்தது பற்றி எனக்குத் தெரியும்.


இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்