இந்திய அணிக்கு எதிராக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள டி20, ஒருநாள் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதில் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன், மோய்சஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி 3 மாத காலம் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நவம்பர் 27, 29, டிசம்பர் 2-ம் தேதி ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6, 8 தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன. இரு தொடர்களும் முடிந்தபின் டெஸ்ட் தொடர் நடக்கிறது.
ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஒருநாள், டி20 போட்டிக்கு மட்டும் அணியை இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “கேமரூன் க்ரீன் உள்நாட்டுப் போட்டிகளில் குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்குச் சிறப்பான பங்களிப்புச் செய்ததால் அவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள கேமரூன் தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரிக்கி பாண்டிங்கிற்குப் பிறகு, நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கேமரூன் க்ரீன் என்று தெரிவித்திருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி பெரும்பாலும் பேட்டிங் ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்க்க அதிகமான முக்கியத்துவம் அளித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின் ஹென்ரிக்ஸ் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அணிக்குள் இடம் பிடிக்க, கடுமையாகப் போராடினார் ஹென்ரிக்ஸ். பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஹென்ரிக்ஸ் ஈர்த்தார். . ஹென்ரிக்ஸின் ஸ்ட்ரைக் ரேட் 150 வரை வைத்துள்ளார். ஒருநாள், டி20 தொடருக்காக ஹென்ரிக்ஸும் ஆஸ்திரேலிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காயம் காரணாக ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய மிட்ஷெல் மார்ஷ், டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய ஏ அணியில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபாட், ஆஸ்டன் அகர், ஆலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ் (துணைக் கேப்டன்), கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், மோஸ்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேனே ரிச்சார்ட்ஸன், ஸ்டீவன் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மாத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago