14 புள்ளிகள் பெற்றிருந்தாலும் டெல்லி கேப்பிடல்ஸ் தகுதி பெறுமா?- 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் என்ன நிலவரம்?

By செய்திப்பிரிவு

முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனதால் ஐபிஎல் 2020 திறந்தவெளிப்போட்டியாக மாறியுள்ளது.

இதனால் பிரமாதமாக ஆடி 14 புள்ளிகளைப் பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கூட வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அட்டவணையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் +0.030 என்ற நெட் ரன் விகிதத்திலும் உள்ளது.

இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன, ஒன்று அக்.31 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, 2வது போட்டி நவ.2ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரானது.

இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த நிலையிலிருந்தும் கூட தகுதி பெற முடியாமல் போகும் வாய்ப்புள்ளது. இந்தத் தோல்வியினால் டெல்லி அணியின் நெட் ரன் ரேட் ஆர்சிபி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை விடவும் குறைந்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாபும் ரொம்பவும் பின்னால் இல்லை.

இந்நிலையில் டெல்லி அணி ஒரு வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்றாலும் 5 அணிகள் 16 புள்ளிகளில் ‘டை’ ஆகும் சாத்தியமும் உள்ளது, அப்படி 16 புள்ளிகளில் 5 அணிகள் டை ஆகும் போது டெல்லி கேப்பிடல்ஸ் வெளியேறும் வாய்ப்பும் உள்ளது. மாறாக மீதமுள்ள 2 போட்டிகளிலும் டெல்லி தோல்வி கண்டால் 14 புள்ளிகளில் முடியும். அப்போது மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பி டெல்லி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சன்ரைசர்ஸ் அணியும் 10 புள்ளிகளில் உள்ளது, அடுத்த 2 போட்டிகளையும் வென்று 14 புள்ளிகள் பெற்றாளும் மற்ற போட்டி முடிவுகளை நம்பியிருக்க வேண்டிய நிலையே உள்ளது. ஏனெனில் 4 பிற அணிகள் இன்னமும் 16 புள்ளிகள் பெறும் வாய்ப்புள்ளது. சன் ரைசர்ஸுக்கு உள்ள ஒரே வாய்ப்பு அதன் நெட் ரன் ரேட் மூலம்தான் அது 0.396-ல் உள்ளது. எப்படியாயினும் 2 போட்டிகளையும் வெல்வது அவசியம்.

இந்நிலையில் டெல்லி அணி வெளியேறினால் அது அவர்களுக்கு பெரிய அடிதான், ஏனெனில் இந்த தொடருக்காக அவர்கள் தயாரித்த விதம் பெரிய அளவில் இருந்தது, ரிக்கி பாண்டிங் பெரிய அளவில் அணியுடன் கடின உழைப்பைப் பகிர்ந்துள்ளார். ஆனால் தொடர் திறந்த தொடராகியுள்ளது என்பது ரசிகர்களுக்கு விருந்துதானே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்