நேற்று ஆர்சிபி அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்திய போட்டியில் பிட்ச் சென்னை அணியின் உள்ளூர் பிட்ச் ஆகிய சேப்பாகம் போலவே பொய் பவுலிங்குக்குப் பொருத்தமாக இருந்தது. இதனால் ஏபி.டிவில்லியர்ஸ், விராட் கோலி போன்ற உயர்தர வீரர்களே பந்து மட்டைக்கு வராமல் திண்டாடினர்.
துபாய் பிட்ச், சென்னை பிட்ச் போலவே இருந்தது என்று வர்ணனையாளரும் முன்னாள் இந்திய தொடக்க வீரருமான் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
“ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. ஆனால் இன்னிங்ஸ் முழுதும் எழும்பவே இல்லை. படிக்கால், பிஞ்ச், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸால் அடிக்க முடியவில்லை.
சிஎஸ்கே தொடர்ந்து ஸ்பின்னர்களை பந்து வீசச் செய்தது. பீல்டிங் கொஞ்சம் சரியில்லைதான். ஆனாலும் ஆர்சிபி 145 ரன்களுக்கும் மேல் செல்ல முடியவில்லை. சாம் கரன் 19வது ஓவரில் 6 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சிஎஸ்கே கட்டுப்பாட்டில்தான் இருந்தது ஆட்டம் ஆனால் இந்தத் தொடரில் கட்டுப்பாட்டு நிலையிலிருந்து சோரம் போயுள்ளனர்.
சிஎஸ்கே பேட் செய்யும் போது பிட்ச் எளிதாகி விட்டதா? அல்லது பவுலிங் சரியில்லையா? ஆர்சிபி பிட்சுக்கு ஏற்றார்போல் வீசவில்லை. அதிகம் ஸ்லோ பந்துகளை வீசி மட்டைக்குத் தள்ளி வீசியிருந்தால் பவுலிங்கின் தரம் வித்தியாசமாக இருந்திருக்கும்.
பிட்ச் சேப்பாக்கம் போல் சிஎஸ்கேவுக்கு பொருத்தமாக அமைந்தது. ஆனால் ஆர்சிபி அதைப் புரிந்து கொள்ளவில்லை. கோலி இதைப் புரிந்து கொள்ளவில்லை” என்றார் ஆகாஷ் சோப்ரா.
தோனி இதை புரிந்து கொண்டார், அதனால்தான் ‘இதுதான் துல்லியமான ஆட்டம்’ என்றார். ஐபிஎல் தொடர்கள் இங்கு நடந்தால் சென்னையில் 7 போட்டிகளில் ஆடி 14 புள்ளிகளை சுலபமாக எடுத்து இத்தனை காலமாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வந்தனர். இப்போது அன்னிய சூழ்நிலைமையில் தோனியின் கேப்டன்சி, பேட்டிங் அம்பலப்பட்டுப் போய்விட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago