கணக்கு என்ன சொல்கிறது? ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளில் யாருக்கு வாய்ப்பு? முந்திக்கொள்ளுமா கொல்கத்தா? 

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகளில் எந்த அணி முதல் 4 இடங்களைப் பிடிக்கப்போகிறது என்று இதுவரை உறுதியாகக் கூற முடியாத சூழல்தான் நிலவுகிறது.

ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இருந்து வருகிறது. இதனால், சிஎஸ்கே தவிர்த்து, கடைசி 3 வரிசையில் இருக்கும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை வென்றிருந்தால், முதல் அணியாக ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருக்கும். ஆனால், ராஜஸ்தான் அணியின் அபாரமான வெற்றியால், அந்த அணியும் ப்ளே ஆஃப் போட்டியில் இணைந்துள்ளது.

மும்பை அணி தற்போது 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. மும்பை அணிக்கு இன்னும் 3 போட்டிகள் (ஆர்சிபி, சன்ரைசர்ஸ், டெல்லி) இருக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் வென்றாலும், மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

ராஜஸ்தான் அணி 12 ஆட்டங்களில் 5 வெற்றி , 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு இரு போட்டிகள் (பஞ்சாப், கொல்கத்தா) இருக்கின்றன. இரு போட்டிகளிலும் வென்றால் 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் செல்லவும் வாய்ப்புள்ளது.

அடுத்துவரும் போட்டிகளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் எவ்வாறு விளையாடப் போகின்றன என்பதைப் பொறுத்து ராஜஸ்தான் நிலைமை உறுதியாகும். ராஜஸ்தான் அணி இன்னும் பஞ்சாப், கொல்கத்தா அணிகளுடன் மோத உள்ளது.

அதேசமயம், கொல்கத்தாவும், பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை வென்றுவிட்டால், அடுத்த இரு போட்டிகளில் இரு அணிகளும் லீக் சுற்றில் தோல்வி அடைந்தால், ராஜஸ்தான் அணி எந்தவிதமான சிரமமும் இன்றி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும். பஞ்சாப், கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடனே இருக்கும். ராஜஸ்தான் அணி தனது இரு ஆட்டங்களிலும் வென்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறும்

ஒருவேளை பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகள் பெறும்பட்சத்தில் ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு நிகர ரன் ரேட்டில் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால், தற்போது மைனஸ் 0.505 என்றுதான் ராஜஸ்தான் வைத்துள்ளது. ஆதலால், 4-வது இடத்துக்குப் போட்டியிடும் அணிகளிடையே நிகர ரன் ரேட் முக்கியமான காரணியாக இருக்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்