அக்.25-ல் துபாய் செல்லும் இரண்டு இந்திய அணி வீரர்கள்

By செய்திப்பிரிவு

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் வீரர்களான செதேஷ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் அக்.25ம் தேதியான இன்று துபாய் செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு முக்கியமான, பெரிய தொடர் வரவிருப்பதையடுத்து அங்கு பயோ-பபுளில் பயிற்சி பெற செல்கின்றனர், 26ம் தேதி தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணியுடன் இணைகிறார்.

இவர்களுடன் இந்திய பேட்டிங் கோச் விக்ரம் ராத்தோர், பவுலிங் கோச் பாரத் அருண், பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரும் செல்கின்றனர்.

இறுதி போட்டி அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்யாத நிலையில் முதலில் டி20, ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் ட்ராபி தொடர் தொடங்கும். டிசம்பர் 17ம் தேதி பிங்க் பந்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது.

ஆனால் சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழு இன்னும் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கு பெறாத புஜாரா, ஹனுமா விஹாரி துபாய் செல்கின்றனர். ஐபிஎல் இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி முடிந்த பிறகு அனைத்து வடிவங்களுக்குமான உத்தேச 30 வீரர்கள் ஆஸ்திரேலியா செல்லவிருக்கின்றனர்.

2018-19-ல் துணைக்கண்டத்துக்கே வரலாறு படைத்த டெஸ்ட் தொடர் வெற்றியை விராட் கோலி தலைமை இந்திய அணி சாதித்தது. இதுவரை ஐபிஎல் தவிர எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் அந்த வெற்றியின் நினைவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்