பிய்த்து உதறிய ராணா, சுனில் நரைன்; அஸ்வின் ஓவர்களிலும் சாத்து; கடைசி 12 ஓவர்களில் 150 ரன்கள் விளாசிய கொல்கத்தா: 194/6

By செய்திப்பிரிவு

அபுதாபியில் இன்று நடைபெறும் மதியப் போட்டியான, ஐபிஎல் 2020-ன் 42வது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட் செயத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.

பெரிய மைதானம் என்பதால் டெல்லி அணி இந்த இலக்கை விரட்டி வெற்றிபெற கடின முயற்சி தேவை.

8 ஓவர்களில் 44/3 என்று தடுமாறி வந்த கொல்கத்தா அணி கடைசி 12 ஓவர்களில் 150 ரன்களை விளாசித்தள்ளியது. இதில் சுனில் நரைன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 64 ரன்களையும், மிகப்பிரமாதமாக ஆடிய இடது கை வீரர் நிதிஷ் ராணா 13 பவுண்டரிகள் ஒரு அற்புதமான லாரா ஸ்டைல் சிக்சருடன் 53 பந்துகளில் 81 ரன்கள் எடுக்கவும், இருவரும் சேர்ந்து 56 பந்துகளில் 4வது விக்கெட்டுக்கு 115 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியதும் டெல்லிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

நிதிஷ் ராணா 38 பந்துகளில் 56 ரன்கள் வருவதற்குள் சுனில் நரைன் 30 பந்துகளில் 60 ரன்கள் என்று 200% ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

முன்னதாக ஷுப்மன் கில் 9 ரன்களில் நார்ட்யே வேகத்துக்கு வெளியேற திரிபாதி 148 கிமீ வேக நார்ட்யே யார்க்கருக்கு பவுல்டு ஆக, தினேஷ் கார்த்திக்கை ஒழிப்பது என்று கொல்கத்தா முடிவு கட்டிவிட்டது. பின்னால் இறங்கி நன்றாக ஆடி வந்தவரை முன்னால் இறக்கி அவரது பேட்டிங்கை காலி செய்ய முடிவு கட்டி விட்டார்கள், கார்த்திக் ரபாடா வேகத்துக்கு பந்த்திடம் எட்ஜ் ஆகி 3 ரன்களுக்கு வெளியேற 7.2 ஓவர்களில் 42/3 என்று ஆனது கொல்கத்தா

நரேன், ராணா அதிரடி, அஸ்வின் சிக்கினார்:

ராணாவும் சுனில் நரைனும் அஸ்வினுக்கு எதிராக முன்னதகா நல்ல ஸ்கோரை அடித்துள்ளனர். 22 பந்துகள் இதுவரை அஸ்வினை ஆடிய ராணா 53 ரன்களை விளாசியுள்ளார் அவரிடம் ஆட்டமிழந்ததில்லை. அதே போல் நரைனுக்கு 10 பந்துகள் வீசியுள்ள அஸ்வின் 28 ரன்களை விட்டுக் கொடுத்தார், வீழ்த்தவில்லை.

இந்த நிலையில் இன்று இவர்கள் கூட்டணி அமைத்த போது அஸ்வினை பந்து வீச அழைத்து ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சியில் கோட்டை விட்டார்.

9வது ஓவரில் அஸ்வினைக் கொண்டு வந்தார். நரைன் லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ். பிறகு தேர்ட்மேனில் பவுண்டரி என்று அஸ்வினின் முதல் ஓவரில் 13 ரன்கள். அடுத்த துஷார் தேஷ்பாண்டே ஓவரில் நிதிஷ் ராணா ஸ்கொயர் லெக் மேல் லாரா பாணியில் ஒரு சிக்ஸ் அடித்தார். நரைன் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க 18 ரன்கள் வந்தது இந்த ஓவரில்.

அஸ்வினைக் கட் செய்து ஸ்டாய்னிஸ் வந்தார். 2 பவுண்டரிகளை ராணா விளாச இந்த ஓவரில் 11 ரன்கள். மீண்டும் முனையை மாற்றி அஸ்வினைக் கொண்டு வர ராணா அலட்சியமாக ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசினார். சிங்கிள் எடுத்து நரைனிடம் கொடுக்க ஷார்ட் பிட்ச் வீசிய அஸ்வினை மீண்டும் லாங் ஆன் மீது ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். மீண்டும் ராணா மிகப்பிரமாதமாக இன்சைடு அவுட் ஷாட்டில் எக்ஸ்ட்ரா கவரில் அஸ்வினை பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் வர 2 ஓவரில் 30 ரன்களை விட்டுக் கொடுத்தார், ஆனால் அஸ்வின் ஏன் லெக்ஸ்பின், கூக்ளி வீசினார் என்பது தான் புரியாத புதிர். இடது கை பேட்ஸ்மென்களுக்கு ஆஃப் ஸ்பின் வீசுவதுதானே சரி. ராணா 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.

நார்ட்யே இடையில் ஒரு ஒவரில் 8 ரன்களை விட்டுக் கொடுத்தார், ஆனால் அடுத்த ஸ்டாய்னிஸ் ஓவரில் நரைன், ஒரு சிக்ஸ், பவுண்டரி அடிக்க ராணா ஒரு பவுண்டரி அடித்தார். 16 ரன்கள் 14ம் ஓவர் முடிவில் கேகேஆர் 127/3 என்று இருந்தனர்.

15வது ஓவரில் மீண்டும் அஸ்வின் வர நரைன் சும்மா இருப்பாரா பளார் என்று பவுண்டரி விளாசினார். பிறகு ஒரு 2 ரன், மீண்டும் லாங் ஆன் மேல் ஒரு 83 மீ சிக்ஸ் அடித்தார் நரைன் அந்த ஓவரில் 15 ரன்கள் வர அஸ்வின் 3 ஒவர் 45 ரன்கள் கொடுத்து சொதப்பினார். 24 பந்துகளில் அந்த ஓவரில் நரைன் அரைசதம் கண்டார்.

கடைசியில் ரபாடாவிடம் 32 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ராணா 20வது ஓவரில் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். மோர்கன் 9 பந்துகளில் ரபாடாவை ஒரு அற்புதமான சிக்ஸ் மற்றும் பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேகேஆர் 194/6 என்று நல்ல ஸ்கோரை எட்டியது.

டெல்லி தரப்பில் நார்ட்யே 27 ரன்களுக்கு 2 விக்கெட். ரபாடா 33 ரன்களுக்கு 2 விக்கெட். ஸ்டாய்னிஸ் 41 ரன்களுக்கு 2 விக்கெட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்