டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக ஐபிஎல் உள்ளிட்ட லீகுகளில் கேப்டன்சி முடிவுகள்தான் சிலபல ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட விஷயங்களை இவ்வாறு பார்த்துள்ளோம், அதே போல் தவறான முடிவுகளால் ஆட்டம் மாறுவதையும் பார்க்கிறோம், உதாரணமாக சிஎஸ்கே அணி கேதார் ஜாதவ்வை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. இம்ரான் தாஹிரை இத்தனை போட்டிக்ள் ட்ரிங்க்ஸ் சுமக்க விட்டது. அன்று ஸ்டீவ் ஸ்மித் உனாட்கட்டிடம் பந்தைக் கொடுத்து டிவில்லியர்ஸிடம் வாங்கியது.
மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் 3வது ஓவரைக் கொடுக்காமல் விட்டதால் மணீஷ் பாண்டே வெளுத்து வாங்கியது என்று நிறைய கூற முடியும். கோலியின் முடிவான வாஷிங்டன் சுந்தரை தொடக்கத்தில் பயன்படுத்தியது அருமையாகக் கைகொடுத்தது, இருந்தும் அன்ரு சிராஜிடம் கொடுத்தார் இதுவும் கைகொடுத்தது.
இந்நிலையில் சாம் கரனை தொடக்க வீரராக இறக்கிய தோனி நேற்று பும்ரா, போல்ட்,கூல்ட்டர் நைலுக்கு எதிராக இறக்காதது ஏன்? இளைஞர் ருதுராஜ் கெய்க்வாடை கொண்டு போய் உலகின் தலைசிறந்த பவுலர்கள் முன்னால் இறக்கி தவறான முடிவை எடுத்தார் தோனி. சாம் கரனை 7ம் நிலைக்குத் தள்ளினார்.
ஆனால் அவர் முடிவிலும் ஒரு காரணம் உள்ளது, ஜோப்ரா ஆர்ச்சர் அன்று சாம் கரனுக்கு நிற்க வைத்து தன் வேகத்தினால் படம் காட்டினார். சரியாக ஆடவில்லை, கடுமையாக பீட்டன் ஆனார். இந்நிலையில் பும்ரா, போல்ட்டுக்கு எதிராக எதற்கு இவரை இறக்க வேண்டும் என்று தோனி பின்னால் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் நேற்று தோனியின் இந்த ஒரு முடிவுதான் கைகொடுத்தது.
உண்மையில் தொடக்கத்தில் சாம்கரனை இறக்கி அவரும் போயிருந்தால் சிஎஸ்கே நேற்று படுமோசமாக காட்சியளித்திருக்கும்.
சரி, பும்ராவை ஏன் தொடக்கத்தில் வீச வைக்க வேண்டும்? ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவே புதிய பந்தில் வீசினார் பும்ரா ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். ஆனால் நேற்று பேட்டின்சன் இல்லாத நிலையில் நேதன் கூல்ட்டர் நைல் மிடில் ஓவர்களுக்கு சரியானவர் என்பதால் பும்ராவுக்குக் கொடுத்தார் பொலார்ட்.
2019-லும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒருமுறை பொலார்ட் கேப்டனகா இருந்த போது பும்ராவிடம் புதிய பந்தைக் கொடுத்தார். அப்போது கிறிஸ் கெய்ல், ராகுலை ஆட்டிப்படைத்தார் பும்ரா. நேற்று 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது.
இந்நிலையில் ராயுடுவை வீழ்த்தவே பும்ராவைத் தொடக்கத்தில் கொண்டு வந்தோம் என்று பொறுப்பு கேப்டன் பொலார்ட் தெரிவித்தார்.
“பவுலர்கள் அருமையாக வீசியது மகிழ்ச்சி. பவுலிங் யூனிட்டாக வெற்றிக்கான ஒரு நிலையை உருவாக்க முயன்றோம் முடித்தோம். முதலில் பும்ரா புதிய பந்தில் வீச வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை, ஆனால் போல்ட் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்தியதால் ராயுடு எங்களுக்கு எதிராக நல்ல இன்னிங்ஸ்களை முன்னதாக ஆடியுள்ளார்.
அதனால் பும்ராவை வைத்து அவரை முடிக்கத் திட்டமிட்டோம். அது பலனளித்தது” என்றார் பொலார்ட்.
உண்மைதான் ராயுடுவுக்கு தொடர்ச்சியாக 4 ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி 4வது பந்தில் வீழ்த்தியே விட்டார் பும்ரா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago