சுனில் கவாஸ்கரை ஒப்பிட்டு என்னை இம்ரான் கடிந்து கொண்டார்: ரமீஸ் ராஜாவின் அனுபவப் பகிர்வு

By இரா.முத்துக்குமார்

இம்ரான் கான் எப்போதும் சுனில் கவாஸ்கர் ஆட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

1981 என்று நினைக்கிறேன், விவ் ரிச்சர்ட்ஸ் தனது உச்சகட்ட பேட்டிங் நிலையில் இருந்த காலம். உலகில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது பெரிய சிக்சர்களால் மைதானம் நெடுக சிதற அடித்துக் கொண்டிருந்தார் விவ்.

ஸ்பின் பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என்று எதுவாக இருந்தாலும் விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு மகத்தான வீரராவார். அதே காலக்கட்டத்தில்தான் இம்ரான் உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இந்திய அணியை 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் (40 விக்கெட்டுகள்) பயங்கரமாகச் சாய்த்தார்.

அப்போது எங்கள் ஹீரோ இம்ரான் கான். நானும் சலீம் மாலிக்கும் அப்போது பாகிஸ்தான் அணிக்குள் வரவில்லை. பிறகுதான் வந்தோம், ஆனால் மே.இ,.தீவுகளுக்கு எதிரான லாகூர் டெஸ்ட் போட்டி குறித்து எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்கள் இருவரையும் ஓய்வறையில் இருக்குமாறு செய்தது. பெரிய வீரர்களுக்கு உதவிபுரியுமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தோம். அப்போது பாகிஸ்தான் ஓய்வறையில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தனர். இம்ரான், ஜாகீர் அப்பாஸ், சாதிக் மொகமது, ஜாவேத் மியாண்டட் கேப்டன், என் சகோதரன் வாசிம் ராஜா இருந்தனர்.

மேற்கிந்திய அணியில் சில்வஸ்டர் கிளார்க் உள்ளிட்ட பெரிய பவுலர்கள் இருந்தனர், கிளைவ் லாய்ட் கேப்டன் என்று நினைக்கிறேன். அந்தத் தொடரில் எங்களை மேற்கிந்திய அணி புரட்டி எடுத்தது வேறு கதை. ஆனால் பிட்ச் சாதுரியமாக தயாரிக்கப்பட்டிருந்தது. பாதி பசுந்தரையாகவும் பாதி ஸ்பின்னுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டிருந்த்து. எனவே இடது கை சுழற்பந்து வீச்சாளர் இக்பால் காசிம் ஒரு முனையிலும் பசுந்தரை பகுதியில் இம்ரான் கான் வீசுமாறும் முடிவெடுக்கப்பட்டது.

இம்ரான் அவரது ஆட்டத்தின் உச்சத்தில் இருந்தார், உலகின் எந்த ஒரு பேட்ஸ்மெனையும் கண்டு அவர் அஞ்சியதில்லை. டெஸ்ட் போட்டியில் நாங்கள் பந்து வீச களமிறங்க வேண்டும், அப்போது சிறு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜாவேத் பேசினார், இம்ரான் தனது ஷூ லேஸை கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது இம்ரானை அழைத்து ஜாவேத், இம்ரான் நீ விவ் ரிச்சர்ட்ஸுக்கு 1,2, 3 பவுன்சர்களை முதலிலேயே வீசு என்றார். அதாவது முதல் 3 பந்துகள் பவுன்சர்கள் என்றார் ஜாவேத். எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது ஷூ லேசைக் கட்டிக் கொண்டிருந்த படியே ஜாவேதுக்கு பதில் அளித்த இம்ரான், “உங்களுக்கு என்ன பைத்தியமா? என்னை விவ் ரிச்சர்ட்ஸ் சிக்சர் அடித்து வெளுத்து வாங்கிவிடுவார் என்றார். விவ் ரிச்சர்ட்ஸ், இம்ரான் போன்ற பவுலரிடத்தில் கூட ஏற்படுத்திய அச்சுறுத்தல் அப்போதுதான் புரிந்தது. ஏனெனில் இம்ரான் ஒருவருக்கும் பயப்படுபவர் அல்ல. எவருக்கும் சவால் விடுப்பவர் இம்ரான்.

விவ் ரிச்சர்ட்ஸ் மீது இம்ரான் கானுக்கு அவ்வளவு மரியாதை, மதிப்பு, அதே போல் சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தையும் அணு அணுவாக ரசிப்பவர், பாராட்டுபவர் இம்ரான்.

சுனில் கவாஸ்கர் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது: டெஸ்ட் போட்டி ஒன்றில், தொடக்க வீரரான நான் ஷார்ட் லெக் திசையில் நின்று கொண்டிருந்தேன், சுனில் கவாஸ்கர் ஆடினார். ஒவ்வொரு முறை இம்ரான் வீசும் மிகப்பெரிய இன்ஸ்விங்கரை துல்லியமாகக் கணித்து சுனில் ஆடாமல் விட்ட போதும், அதே போல் பவுன்சரை சிறப்பாக சுனில் கவாஸ்கர் கையாளும் போதும், இம்ரான் மைதானத்திலேயே, சுனில் முன்னிலையிலேயே, அவருக்கு சவால் விடுக்காமல் நேராக என்னைப்பார்த்து, “பார்! சுனிலின் ஆட்டத்தைப் பார், எவ்வளவு துல்லியமாக ஆடுகிறார் பார், நீயெல்லாம் இப்படி ஆடுவதே இல்லை” என்று கடிந்து கொள்வார்.

நான் பிறகு சுனிலிடம் இது பற்றி கூறிய போது, நான் நன்றாக ஆடுகிறேனா இல்லையா என்பதை விட நீங்கள் ஆடுவதை அப்படி ரசிக்கிறார் இம்ரான், அதனால் என்னைக் கடிந்து கொள்கிறார் என்றேன்.

இவ்வாறு சுவையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ரமீஸ் ராஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்