ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள்:  ராகுலின் ‘பிரில்லியன்ஸ்’, மயங்க் அகர்வாலின் அட்டகாச பீல்டிங்- மும்பை ஆதிக்கத்தை நிறுத்திய கிங்ஸ் லெவனின் சூப்பர் வெற்றி

By இரா.முத்துக்குமார்

டி20 கிரிக்கெட்டிலேயே மிகப்பிரமாதமான போட்டி என்று இதனை வர்ணிக்கின்றனர்! ஆம்! ஒரே ஐபிஎல் போட்டியில் இரண்டு முறை ஆட்டம் டை ஆகி, இருமுறை சூப்பர் ஓவருக்குச் சென்றது. 44 ஒவர்கள் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியது.

அன்று பிரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் அணியின் ஆட்டத்தை இருதய பலவீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தார், அதே போல்தான் இந்த ஆட்டமும் இருந்தது.

இரண்டு சூப்பர் ஓவர்கள்! இரண்டும் சூப்பர் ஓவர்கள்: பும்ரா, ஷமி அற்புதம், ராகுலின் ஸ்டன்னிங் ரன் அவுட்:

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 36வது போட்டியில் இரு அணிகளின் ஸ்கோரும் 176/6 என்று டை ஆனது. அப்போது முதல் சூப்பர் ஒவருக்கு ஆட்டம் சென்றது. கிங்ஸ் லெவன் பேட் செய்தது, கே.எல்.ராகுல், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா பேட்டிங் பொறுப்புகளை ஏற்றனர். ரியல் டைமில் பிரமாதமாக வீசிய ஜஸ்பிரித் பும்ரா (3/24), மும்பை இந்தியன்ஸ் சூப்பர் ஓவர் சுமையை ஏற்றுக் கொண்டார். ராகுல் சிங்கிள் எடுக்க அடுத்த பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்த 3 பந்துகளில் பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை 4 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. கடைசி பந்து ராகுலுக்கு துல்லிய யார்க்கர் வீசி பும்ரா எல்.பி. ஆக்க ஸ்கோர் 5/2 என்று பஞ்சாப் முடிந்தது.

5 ரன்கள்தானே... மும்பை ஒரு பந்தில் முடித்து விடுவார்கள் என்று மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். ரோஹித் சர்மா, டி காக் இறங்கினர். கிங்ஸ் லெவன் சூப்பர் ஓவர் சுமை ஷமியிடம் அளிக்கப்பட்டது. ஷமி தன் கடமையை சிறப்பாகச் செய்து முதல் 4 பந்துகளில் 3 ரன்களையே கொடுத்தார். யார்க்கர் மேல் யார்க்கர்களாக வீசினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை எனும் போது 2வது ரன்னை ஓடும் முயற்சியில் டி காக் ரன் அவுட் ஆக ஆட்டம் மீண்டும் 5 ரன்கள் என்று டை ஆனது. கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக மிகவும் பிரில்லியண்ட் ஆக டைவ் அடித்து முன்னால் பாய்ந்து பந்தை ஸ்டம்புக்குள் தட்டி ரன் அவுட் செய்தார். மீண்டும் 2வது சூப்பர் ஓவருக்குச் சென்றது.

மயங்க் அகர்வாலின் திகைப்பூட்டும் பீல்டிங், சிக்சரையே தடுத்த அற்புதம்:

ஆட்டம் 2வது சூப்பர் ஓவருக்குச் செல்கிறது என்றால் முதல் சூப்பர் ஓவரில் ஆடிய, ராகுல், பூரன், ஹூடாவோ அல்லது பும்ரா, ஷமி, ரோஹித், டிகாக்கோ ஆகியோர் மீண்டும் இறங்க முடியாது. வேறு வீரர்களைத்தான் இறக்க முடியும். இது விதி.

2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. கிரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா இறங்கினர். பஞ்சாப் அணியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கருதப்படும் ஜோர்டான் வீசினார். முதல் பந்து துல்லிய யார்க்கர், 2வது பந்து வைடாக மீண்டும் அந்தப் பந்தை வீச வேண்டியதாயிற்று. பொலார்ட் பிறகு கவர் திசையில் பவுண்டரி அடித்தார். ஜோர்டான் இன்னொரு வைடை வீச, அடுத்ததாக ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆனார். அடுத்ததாக மயங்க் அகர்வால் ஒரு நிச்சயமான சிக்ஸரை அபாரமாகத் தடுத்தார், உண்மையில் திகைப்பூட்டக்கூடிய தடுப்பாகும் அது. எல்லைக் கோட்டை தாண்டிய அகர்வால் எம்பி தரையை தொடாமல் சிக்ஸ் பந்தை மைதானத்துக்குள் தட்டி விட்டார். அங்கு சிங் பந்தை எடுத்தார். இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் 11/1 என்று முடிந்தது.

12 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் யுனிவர்ஸ் பாஸ் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வாலை இறக்கினர். மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரெண்ட் போல்ட்டை அழைத்தது, ஒரே புல்டாஸ் கெய்ல் அதனை லாங் மேன் கதறடித்தார் சிக்ஸ். பிறகு சிங்கிள் எடுத்தார். 4 பந்துகளில் 5 ரன்கள் தேவை. மயங்க் அகர்வால் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி பிறகு மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடிக்க ஆட்டம் கிங்ஸ் லெவன் வெற்றியில் முடிந்தது ட்ரெண்ட் போல்ட் ஒரே புல்டாசாக வீசி சொதப்பினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றியை நிறுத்தியது கிங்ஸ் லெவன்.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்த போது ரோஹித் சர்மா (9), சூரியகுமார் யாதவ் (0), இஷான் கிஷன் (7), ஹர்திக் பாண்டியா (8) ஆகியோர் சொதப்ப டி காக் மீண்டும் ஒரு அற்புதமான இன்னிங்ஸை ஆடி 43 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுக்க குருணால் பாண்டியா 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 பந்துகளில் 34 ரன்களை எடுக்க டி காக், குருணால் ஜோடி 56 ரன்களைச் சேர்த்தனர். 15.3 ஓவர்களில் ஹர்திக் பாண்டியாவையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் 116/5 என்று இருந்தது. ஆனால் அடுத்த 27 பந்துகளில் 60 ரன்களை விளாசினர். கிரன் பொலார்ட் 12 பந்துகளில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் நொறுக்க கூல்ட்டர் நைல் 12 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 176/6 என்று நல்ல ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் தொடக்க வீச்சாளராக மிகச்சிறப்பாக வீசி 4 ஓவரில் 24 ரன்களையே கொடுத்தார். ஷமி 2 விக்கெட்டுகளையும் இடதை வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெற்றிக்கு 177 ரன்கள் தேவை என்ற நிலையில் மயங்க் அகர்வால் தடவினார். ஆனால் ராகுல் தன் அருமையான பார்மை தொடர்ந்து காட்ட ட்ரெண்ட் போல்ட் ஓவரில் 3 பவுண்டரி 1 சிக்ஸ் விளாசினார். அபாய கிறிஸ் கெய்ல் 11 பந்துகளில் 2 சிக்ஸ் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து சாஹரிடம் ஆட்டமிழக்க, நிகோலஸ் பூரன் 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்க்ளுடன் 24 ரன்கள் எடுத்து தன் பங்கை கச்சிதமாகச் செய்தார். பூரன், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து வெளியேற, ராகுல் இன்னொரு அரைசதத்தை எடுத்தார். 51 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்த ராகுல் பும்ராவின் துல்லிய யார்க்கருக்கு பவுல்டு ஆனார்.

ஜோர்டான், ஹூடா சேர, கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஒவரில் ஹூடா,ஜோர்டான் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடிக்க 13 ரன்கள் வந்தது, ஹூடாவுக்கு கேட்ச் விடப்பட்டது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை. போல்ட் வீச முதல் பந்தில் ஹூடா சிங்கிள் எடுக்க, அடுத்த பந்தில் ஜோர்டான் பவுண்டரி அடித்தார். அடுத்த 3 பந்துகளில் 2 ரன்களே வந்தன. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை. போல்ட் யார்க்கர் வீச அதை எப்படியோ லாங் ஆனில் தட்டி விட்டு 2 ரன்கள் ஒட முயன்றார் ஜோர்டான், ஆனால் அவர் நேராக ஓடாமல் வட்டம் போட்டு பிறகு நீளமாக ஓடுவதற்குள் பொலார்ட் பெரிய த்ரோவை கீப்பருக்கு அடிக்க ரன் அவுட். ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவருக்குச் ச்சென்றது, இரண்டு சூப்பர் ஓவர்களில் கிங்ஸ் லெவன் வென்றது. ஆட்ட நாயகன் கே.எல்.ராகுல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்