டி20: ‘ஹெல்ப் ஃபார் ஹீரோ’ அணியின் ஹீரோவான தோனி

By இரா.முத்துக்குமார்

கியா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக லெவன் அணிக்கும், ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணிக்கும் இடையிலான டி20 காட்சிப் போட்டியில் தோனி அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்ததோடு பேட்டிங்கில் தனது பாணியில் 22 பந்துகளில் 38 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக வெற்றி பெற்றுத் தந்தார்.

முழு தீவிரத்துடன் இந்தப் போட்டி விளையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நிதிதிரட்டும் காட்சிப் போட்டிகள் கேலிக்கூத்தாக போய் முடிவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டி வித்தியாசமாக அமைந்தது.

ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணியில் தோனி, விரேந்திர சேவாக் கலக்கினர். முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணியில் மேத்யூ ஹெய்டன், கிரேம் ஸ்மித் களமிறங்கினர். இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப் பந்தில் ஸ்மித் ஸ்டம்ப் பறந்தது. ஹெய்டன் 36 ரன்கள் எடுத்து கிரேம் ஸ்வான் பந்தில் தோனி ஸ்டம்ப்டு செய்ய வெளியேறினார். 11 ஓவர்களில் 76/2. பிரையன் லாரா 16 ரன்கள் எடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்ட்ராஸின் அபார கேட்சுக்கு வெளியேறினார்.

மகேலா ஜெயவர்தனே அரைசதத்துக்கு அருகில் வந்து 48 ரன்களில் அவுட் ஆனார். பிரெண்டன் மெக்கல்லமும் வெளுத்து வாங்கி 18-வது ஓவரில் தோனியின் கேட்சுக்கு அவுட் ஆனார்.

ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹெல்ப் ஃபார் ஹீரோ அணியில் சேவாக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் வெளுத்து வாங்கினர், முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் விளாசப்பட்டது. சேவாக் அருமையான சில பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். ஸ்ட்ராஸ் 26 ரன்கள் எடுத்தார். டிம் சவுதி, ஆப்கன் பவுலர் ஷபூர் சத்ரான் ஆகியோர் பந்துகள் பவுண்டரிகளுக்கு பறந்தன.

இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன் ரன் விகிதம் மந்தமடைந்தது. டேமியன் மார்டினும் சொற்ப ரன்களில் வெளியேற, ஹெர்ஷல் கிப்ஸுடன் தோனி இணைந்தார். கிப்ஸும் ஆட்டமிழக்க கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 82 ரன்கள் தேவைப்பட்டது. தோனி சில அருமையான ஷாட்களை ஆடியதோடு, ஒன்று, இரண்டு ரன்களையும் அருமையான ஓட்டத்தின் மூலம் எடுத்து ஸ்திரப்படுத்தினார்.

கடைசி ஓவரில் தோனி தனது பாணியில் பவுண்டரியுடன் வெற்றி பெற்றுத் தந்தார். 3 பந்துகள் 5 விக்கெட்டுகள் மீதமிருக்கையில் ஹெல்ப் ஃபார் ஹீரோ அணி வென்றது.

ஆட்ட நாயகனாக 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்த தோனி தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்குக்காக மட்டுமல்ல விக்கெட் கீப்பிங்குக்காகவும் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

நலம் குன்றிய பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்