பதற்றமா.. எனக்கா?  ‘யுனிவர்ஸ் பாஸ்’ பேட்டிங் செய்கிறேன் - கிறிஸ் கெய்ல் உற்சாகம் 

By செய்திப்பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகப்பெரிய கவர்ச்சியே கிறிஸ் கெய்ல், ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள்தான், இதில் கிறிஸ் கெய்ல் வயிற்று உபாதை காரணமாக கிங்ஸ் லெவன் அணியில் இத்தனைப் போட்டிகளாக ஆட முடியாமல் கடைசியில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக இறங்கி சிக்சர் மழை பொழிந்தார்.

கிங்ஸ் லெவன் அணி கெய்ல் வந்த உற்சாகத்தில் வெற்றிப்பாதைக்குத் திரும்பியது. 45 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் கெய்ல் 53 ரன்கள் எடுத்து பெரிய வெற்றிய உறுதி செய்தார்.

அதுவும் அவர் இதுவரை இறங்காத ஒன் டவுன் அல்லது 3ம் நிலையில் இறங்கியதால் கிங்ஸ் லெவன் அணியின் முதல் 3 வீரர்கள் என்றால் தற்போது ஐபிஎல் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆட்டம் வெற்றியுடன் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு கெய்ல் கூறியதாவது:

பதற்றமாகவெல்லாம் இல்லை. அதாவது கம் ஆன்.. யுனிவர்ஸ் பாஸ் பேட்டிங் செய்கிறேன்.. எனக்காவது பதற்றமாவது, அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த பிட்சில் பந்துகள் கொஞ்சம் நின்று வந்தன. ஆனால் 2வதாக பேட் செய்வதே இங்கு சிறந்தது.

அணி என்னை 3ம் நிலையில் இறங்கக் கேட்டது, அது ஒரு விஷயமேயல்ல. எங்கள் அணி தொடக்க வீரர்கள் ராகுல், அகர்வால் சிறப்பாக ஆடி வருகின்றனர். அதற்கு இடையூறு செய்ய விரும்பவில்லை.

எனக்கு இந்தப் பணியைக் கொடுத்தார்கள், அதை ஏற்றுக் கொண்டேன், நான் சொல்வதெல்லாம் (தன் பேட்டில் உள்ள ஸ்டிக்கரைத் தொட்டுக் காட்டி) பெயருக்கு மரியாதை கொடுங்கள்.

என்றார் கிறிஸ் கெய்ல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்