ரொனால்டோவைக் கடந்தார், கோல்களில் பிலேவுக்கு அடுத்த இடத்தில் நெய்மார்: ஹாட்ரிக்குடன் பெரிய சாதனை

By செய்திப்பிரிவு

பிரேசில் அணிக்காக அதிக கோல்களை அடித்த 2வது வீரர் என்ற சாதனையை பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் செவ்வாயன்று நிகழ்த்தினார். இதன் மூலம் பிரேசில் கால்பந்தாட்ட அனைத்து கால சூப்பர்ஸ்டார் பிலேவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் நெய்மார்.

பெரூ அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது, இதில் நெய்மார் 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

இதன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த ரொனால்டோவைக் கடந்து 64 கோல்களுடன் 2ம் இடத்திற்கு முன்னேறினார், ரொனால்டோ 62 கோல்கள் அடித்திருக்கிறார், முதலிடத்தில் உள்ள பிலே 77 கோல்களை அடித்துள்ளார் என்கிறது ஃபீபா தகவல்.

2010-ம் ஆண்டில் பிரேசில் அணியில் முதல் போட்டியில் ஆடிய நெய்மார் 103 போட்டிகளில் 64 கோல்களை அடித்துள்ளார்.

நெய்மார் ஹாட்ரிக் சாதனை:

உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டியில் நேற்று பெரூ வீரர் ஆந்த்ரே கரிலோ 6 நிமிடத்தில் முதல் கோலை அடித்து பெரூவுக்கு முன்னிலை கொடுத்தார். கோலுக்கு அருகே மிகப்பிரமாதமாக ஒருபந்தை அவர் கோலுக்குள் அடித்தார்.

28வது நிமிடத்தில் பெரூ வீரர் ஒருவர் பெனால்டி பகுதிக்குள் முறையற்ற விதத்தில் இடையூறு விளைவிக்க பெனால்டி கிக் அளிக்கப்பட்டது, இதனை நெய்மார் கோலாக மாற்றி சமன் செய்தார்.

ஆனால் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பெரூ வீரர் ரெனாட்டோ டபியாஸ் 25 மீட்டர் தூரத்திலிருந்து கோலை நோக்கி பிரமாதமாக அடித்தார். பந்து ரோட்ரிகோ கேயோ மீது பட்டு கோல் வலைக்குள் சென்றது, பெரூ 2-1 என்று முன்னிலை. ஆனால் இந்த முன்னிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. 5 நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிகார்லிசன் இன்னொரு கோல் அடித்து சமன் செய்தார்.

பிறகு ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருக்கும் போது நெய்மார் இன்னொரு பெனால்டி கிக்கில் பிரேசிலின் 3வது கோலை அடித்தார். பிறகு காயங்களினால் இழந்த நேரத்திற்கு ஈடுகட்டும் நேரத்தில் நெய்மார் அபாரமாக ஒரு கோலை அடித்து தனது 64வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனையுடன், அதிக கோல்களில் 2ம் இடம்பிடித்துச் சாதனை புரிந்தார்.

பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் பெரூவை வீழ்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்