ரிஷப் பந்த் பொதுவாக லெக் திசையில்தான் அதிக ஷாட்களை ஆடுவார், அந்தப் பக்கம்தான் அவருக்கு வாகாக இருந்து வருகிறது, ஆனால் சமீப காலமாக அவரது ஆஃப்-சைடு ஆட்டமும் மேம்பட்டுள்ளதாக மே.இ.தீவுகள் ‘லெஜண்ட்’ பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் பயனுள்ள பங்களிப்புகளை மேற்கொண்டு வருகிறார், ஆனால் அவர் தனது முழு அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கவில்லை. டெல்லி அணி ஒருவேளை அவரை சீனியர் வீரராகக் கருதி பொறுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதா என்பதும் தெரியவில்லை.
ஆனால் இந்தத் தொடரில் நல்ல பங்களிப்பு என்ற அளவில் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடிவருகிறார். இதற்கு அவர் ஆஃப் சைடில் மேற்கொண்டு வரும் மேம்பட்ட ஆட்டம் காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில் பிரையன் லாரா கூறியதாவது:
» 184 ரன்கள் போதாது என்றே நினைத்தோம், ஆனால் பிட்ச் வித்தியாசமாக மாறிவிட்டது: ஸ்ரேயஸ் அய்யர்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் ஒரு பெரிய சொத்து. இன்றை தேதியில் அவர் தன் ஆட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார்.
அவரை நான் பார்க்கத் தொடங்கிய காலத்தில் அவரது ஆட்டம் பெரும்பாலும் லெக் திசையில் அதிகம் ரன்களை எடுப்பவர் என்பதாகவே இருந்தது. அவரது ஆரம்ப கால ரன் வரைபடத்தைப் பாருங்கள் ஆன் திசையில் அவரது நாட்டம் இருப்பது தெரியும்.
இது சரிப்பட்டு வரவில்லை என்பதை அவர் உணர்ந்திருப்பார் போல் தெரிகிறது, அதனால் பேட்டிங்கில் அவர் வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று கருதுகிறேன்.
இப்போது பாருங்கள் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் அடிக்கிறார். அவரது ரன் வரைபடம் கவன ஈர்ப்பு பெறும் அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஆம் இனி பவுலர்களுக்கு அவர் ஒரு பெரிய கவலையாகவே இருப்பார்.
இப்போது அவரிடம் நல்ல பேலன்ஸ் இருக்கிறது. எக்ஸ்ட்ரா கவர், கவர், பாயிண்ட் என்று தூக்கி அடிக்க ஆரம்பித்துள்ளார். லெக் திசையில் ஆடும்போது முன்பு ஆஃப் திசையில் லேசாகச் சாய்வார், இப்போது அதெல்லாம் இல்லாமல் நல்ல பேலன்ஸ் உள்ளது.
இது அவரது பேட்டிங்கில் பெரிய மாற்றம். இது நிச்சயம் அவரது ஆல் ரவுண்ட் பேட்டிங்குக்கு உதவும். இவர் நீண்ட காலம் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார் பிரையன் லாரா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago