குர்கீரத் சிங் ஆல்ரவுண்ட் திறமை: இந்தியா ஏ அபார வெற்றி

By இரா.முத்துக்குமார்

பெங்களூருவில் நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி.

பேட்டிங்கில் அதிரடி முறையில் 65 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சனுடன் முக்கிய சதக்கூட்டணி அமைத்து 125/5 என்ற நிலையிலிருந்து 322 ரன்களுக்கு முன்னேற உதவிய குர்கீரத் சிங் பிறகு பந்துவீச்சில் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் வங்கதேசம் 226 ரன்களுக்குச் சுருண்டது.

இலக்கைத் துரத்திய வங்கதேச ஏ அணி, ஸ்ரீநாத் அரவிந்த் பந்து வீச்சில் அதிர்ச்சி தொடக்கம் கண்டது. இவர் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் அதிரடி வீரர் சவுமியா சர்க்கார் (9), அனாமுல் ஹக் (0) ஆகியோரை அரவிந்த் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பிறகு மற்றொரு தொடக்க வீரர் ரோனி தாலுக்தாரையும் வீழ்த்தி வங்கதேசத்தை 34/3 என்று நிலைகுலையச் செய்தார்.

பிறகு பேட்டிங்கில் கலக்கிய ரிஷி தவண், வங்கதேச கேப்டன் மோமினுல் ஹக், சபீர் ரஹ்மான் ஆகியோரை காலி செய்ய அந்த அணி 87/5 என்று தடுமாறியது. ஆனால் நசீர் ஹுசைன், விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 120 ரன்களைச் சேர்த்து நம்பிக்கையூட்டினர்.

ஆனால் இருவரையும் 3 ஓவர்கள் இடைவெளியில் குர்கீரத் வீழ்த்தினார். அதன் பிறகு மீள முடியாத வங்கதேச ஏ அணி இன்னமும் 7.3 ஓவர்கள் மீதமிருக்கையில் அனைத்து விக்கெட்டுகளையும் 226 ரன்களுக்கு இழந்து தோல்வி தழுவியது.

இந்தியா ஏ தரப்பில் அரவிந்த் 3 விக்கெட்டுகளையும், ரிஷி தவண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, குர்கீரத் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்