நேற்று ஆர்சிபி தொடக்க வீரரான ஆஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச், பந்து வீசும் முன்பே அஸ்வின் ஓவரில் ரன்னர் கிரீசை விட்டு சில அடிகள் முன்னேறினார்.
பந்து வீசுவதை நிறுத்திய அஸ்வின் பிஞ்ச்சை எச்சரித்து மன்கட் அவுட்டை தவிர்த்தார், இந்நிலையில் முதல் முறை எச்சரிக்கை விடுத்துள்ளேன் இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும், இனி பேட்ஸ்மென்கள் ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பு கிரீசைத்தாண்டினால் மன்கடிங் செய்து விடுவேன், பிறகு என்னைக் குறை கூறாதீர்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், “நான் தெளிவுபடுத்தி விடுகிறேன்!! 2020-க்கு முதலும் கடைசியுமான எச்சரிக்கை விடுத்தேன்.
நான் இதை அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கிறேன், பிறகு என்னைக் குற்றம்சாட்டாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
» டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தவே முடியாத அணியல்ல, ஆனால் வீழ்த்துவது கடினம்: விராட் கோலி கருத்து
» 29 வயது ஆப்கான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் சாலை விபத்தில் மரணம்
ஆகவே பேட்ஸ்மென்களே! ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை ‘மன்கட் அஸ்வின்’ ஆக்கிவிடாதீர்கள் என்று மட்டையாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்வினும் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் எச்சரிக்கை கொடுக்க பாண்டிங் அறிவுறுத்தினார், ஆனால் அஸ்வின் வாதங்களையும் ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து நேற்று பிஞ்ச் கிரீசைத் தாண்டி சென்ற போது பந்து வீசுவதை நிறுத்தி விட்டு அவரை நோக்கி ஒரு கேலிப்புன்னகை விடுத்து எச்சரித்தார், பாண்டிங்கும் இதைப் பார்த்து புன்னகைத்தார்.
ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை ‘மன்கட் அஸ்வின்’ ஆக்காமல் இருப்பது வீரர்கள் கையில்தான் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago