நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘மன்கட் அவுட்’விஷயத்தில் தன் மனநிலை மாற்றத்தை வெளிப்படுத்தியது ஆச்சரியமளிப்பதாக இருந்தது.
கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் கேப்டனாக இருந்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை அவர் மன்கட் முறையில் அவுட் செய்தார், பட்லரும் 2 அடி கிரீசைத் தாண்டி பவுலிங் செய்யும் முன்பே வந்தார், அப்படி முன்னேறி வந்தால் பவுலர் வீசாமலேயே ரன் அவுட் செய்யலாம் அது விதிப்படி சரிதான், ஆனால் கிரிக்கெட்டில் இது ஆட்டத்தின் மீதான வீரரின் நல்லுணர்வுக்கு எதிரானது என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அஸ்வின் தன் சார்பாக பேட்ஸ்மென் இவ்வாறு முன் கூட்டியே கிரீசை விட்டு சில அடிகள் சென்றால், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் போது இது ஒரு விதிமீறல் சாதகம்தானே ஆகவே அவுட் செய்வேன் என்றார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அஸ்வினுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் அஸ்வின் தன் பக்க வாதத்தை முன் வைத்தார் அதை ஏற்றுக் கொண்ட பாண்டிங் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும், இப்படிச் செய்யும் பேட்ஸ்மென்களின் அணிக்கு எதிராக எதிரணிக்கு ரன்களை அளிக்க வேண்டும் என்று பலவித ஆலோசனைகளை இருவரும் ஆலோசித்தனர். ஆனால் அப்படி ரன் அவுட் செய்ய வேண்டாம், பந்து வீசுவதை நிறுத்தி பேட்ஸ்மெனுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் என்று அஸ்வினுக்கு பாண்டிங் அறிவுறித்தினாரா என்று தெரியவில்லை.
நேற்று ஆர்சிபி அணி பேட் செய்த போது இன்னிங்ஸின் 3வது ஓவரை வீசினார் அஸ்வின். பேட்டிங் முனையில் தேவ்தத் படிக்கால், ரன்னர் முனையில் ஆஸ்திரேலிய வீரர் ஏரோன் பிஞ்ச், அப்போது ஒரு பந்தை வீச வந்தார் அஸ்வின், ஆனால் வீசவில்லை, ஏன் என்று பார்த்தால் ஏரோன் பிஞ்ச் சில அடிகள் ரன்னர் முனையில் கிரீசைத் தாண்டி வந்திருந்தார்.
அஸ்வின் பந்து வீசுவதை நிறுத்தி விட்டு ஒரு கேலிப்புன்னகையுடன் பிஞ்ச்சைப் பார்த்தார், மன்கட் அவுட் செய்யவில்லை. இது ஆச்சரியமளித்தது, அஸ்வின் மனமாற்றம் அடைந்து விட்டாரா, பாண்டிங்கின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு விட்டாரா என்பது சுவாரஸியமான மாற்றமே.
இந்தத் தருணத்தை கிரிக் இன்போ வர்ணனை துல்லியமாகப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago