ஐபிஎல் டி20 வரலாற்றில் மும்பைஇந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை நேற்று எட்டி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னாவுடன் சாதனையாளர்கள் வரிசையில் இணைந்தார்.
அபு தாபியில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் 13-வதுலீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது.
192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா முதலாவது கவர் டிரைவ் ஷாட் அடித்தபோது, ஐபிஎல் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
191 போட்டிகளில் ஆடிய ரோஹித் சர்மா ஐபிஎல் 5,000 ரன்களை நேற்று கடந்தார். ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா இதுவரைஒரு சதம் 37 அரைசதங்களை அடித்துள்ளார். 200 சிக்ஸர்களை அடித்த 4 முக்கிய வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்.
இதில் தொடக்கத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடிய ரோஹித் சர்மா 1,170 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு மும்பை அணிக்கு வந்த ரோஹித் சர்மா தொடர்ந்து 9 ஆண்டுகளாக அணியில் நீடித்து வருகிறார்.
2013-ம் ஆண்டு மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா அந்த ஆண்டே அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்தார். இதுவரை ரோஹித் சர்மா தலைமையில் 4 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது.
ஏற்கெனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ல் சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியில் ரோஹித் இடம் பெற்றிருந்தார். ஆக, 5 சாம்பியன் பட்டம் வென்ற அணியில் ரோஹித் விளையாடியுள்ளார்.
இதற்கு முன் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே 5 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தனர். இதில் விராட் கோலி 180 போட்டிகளில் 5,430 ரன்களையும், ரெய்னா, 193 போட்டிகளில் 5,368 ரன்களையும் சேர்த்துள்ளனர்.
4-வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார். 129 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 4,793 ரன்களுடன் உள்ளார்.
ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் எட்டியதற்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் “ ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரா. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், இன்னும் அதிகமான சாதனைகள் படைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago