இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக, விக்கெட் கீப்பராக இருந்த ஜானி பேர்ஸ்டோ இன்றைய தினத்தில் இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.
ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்துக்காக 2018-ல் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக கொழும்புவில் சதம் எடுத்தார் (110). கடைசியாக 2019 டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார்.
அந்த 110--க்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் எடுத்த 9 ரன்களுக்கு இடையே அவர் இரண்டு டக்குகளையும் இரண்டு அரைசதங்களையும் மட்டுமே எடுத்தார். கடைசி 9 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்கோர் 30,4, 36, 17, 25, 22, 14, 1, 9 ஆகியவையாகும்.
இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் தன் இடத்தைத் தக்க வைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோ இதுவரை 70 போட்டிகளில் ஆடி 4030 ரன்களை 6 சதங்கள், 21 அரைசதங்களுடன் 34.74 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் ஒப்பந்த வீரர்கள் விவரம்: ஆண்டர்சன், ஆர்ச்சர், பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், கிராலி, சாம் கரண், ஆலி போப், ஜோ ரூட், டாம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஒப்பந்த வீரர்கள் : மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, பட்லர், டாம் கரண், இயான் மோர்கன், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago