இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமான வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வகையில் எம்எஸ் தோனி இதுவரை 91 டிஸ்மிஸல்களைச் செய்திருந்தார். அதை தற்போது அலிஸா ஹீலி முறியடித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நேற்று நடந்த நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியின்போது அலிஸா ஹீலி இந்தச் சாதனையைச் செய்தார். பிரிஸ்பேனில் இன்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை வேர்ஹம் பந்துவீச்சில், நியூஸி. வீராங்கனை அமி சாட்டர்வொய்டை ஸ்டெம்பிங் செய்தும், லாரா டவுனின் விக்கெட்டை கேட்ச் பிடித்தும் ஹீலி இந்தச் சாதனையைச் செய்தார்.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனி, இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 98 ஆட்டங்களில் 57 கேட்ச், 34 ஸ்டெம்பிங்குகள் என 91 டிஸ்மிஸல்களைச் செய்திருந்தார்.
ஆனால், ஆஸி. வீராங்கனை அலிஸா ஹீலி 114 போட்டிகளில் 92 டிஸ்மிஸல்களைச் செய்து தோனியின் சாதனையை முறியடித்தார்.
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் 90 போட்டிகளில் 74 டிஸ்மிஸல்களைச் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளார். ராஹேல் ப்ரீஸ்ட் 75 போட்டிகளில் 72 டிஸ்மிஸல்களைச் செய்து 4-வது இடத்தில் உள்ளார்.
மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மெரிஸா அகுலியரியா 95 போட்டிகளில் 75 டிஸ்மிஸல்களைச் செய்துள்ளார். இந்திய மகளிர் விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா 50 போட்டிகளில் 67 டிஸ்மிஸல்களையும், தென் ஆப்பிரி்க்கா வீராங்கனை த்ரிஷா ஷெட்டி 76 போட்டிகளில் 64 டிஸ்மிஸல்களையும் செய்துள்ளார்.
மே.இ.தீவுகள் வீரர் தினேஷ் ராம்தின் 71 போட்டிகளில் 63 டிஸ்மிஸல்களையும், வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 86 போட்டிகளில் 61 டிஸ்மிஸல்களையும் செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago