இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டம் மழை காரணமாக 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் ஸ்மித் 70, பெய்லி 54, மேக்ஸ்வெல் 49, வாட்சன் 39, மிட்ஷெல் மார்ஸ் 61 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டீவன் ஃபின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து தோல்வி
310 ரன் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து ஹாலெஸ் (18) விக்கெட்டை விரைவில் இழந்தது. ராய் 31, டெய்லர் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது, 21.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்திருந்தன. நான்காவது விக்கெட்டாக ஸ்டோக்ஸ் (10) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். கேப்டன் மோர்கன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 42.3 ஓவர்களில் 245 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வியுற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
வார்னர் விலகல்
2-வது ஒருநாள் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் எஞ்சி யுள்ள 3 போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
ஸ்டோக்ஸ் சர்ச்சை
நான்காவது விக்கெட்டாக ஸ்டோக்ஸ் பீல்டிங்குக்கு இடையூறு விளைவித்தல் முறையில் ஆட்டமிழந்தார். 26-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அப்போது, நான்காவது பந்தை ஸ்டோக்ஸ் ஏறி வந்து அடிக்க முயன்றார். பந்து நேராக ஸ்டார்க்கிடமே சென்றது. அதைப்பிடித்த ஸ்டார்க், பந்தை அடிப்பதற்காக கிரீஸைவ விட்டு ஸ்டோக்ஸ் வெளியே வந்திருந்ததால் ஸ்டம்பை நோக்கி வீசினார்.
ஸ்டம்புக்கும், ஸ்டார்க்கும் இடையே நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் தன்னை நோக்கி வந்த பந்தை இடது கையால் தடுத்தபடி கீழே விழுந்தார்.
ஆஸ்திரேலியர்கள் அவுட் கோரி முறையீடு செய்ததை கள நடுவர்கள் ஏற்கவில்லை. ஆனால் 3-வது நடுவர் ஜோ வில்சன், பந்தை ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தடுத்து இடையூறு செய்ததாகக் கணித்து அவுட் என தீர்ப்பளித்தார்.
இவ்வகையில் ஆட்டமிழக்கும் 7-வது பேட்ஸ்மேன் ஸ்டோக்ஸ்.
இதுதொடர்பான விதிமுறை 37-ன்படி, ஸ்டம்பை நோக்கி ரன் அவுட்டுக்காக எறியப்பட்ட பந்தை ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றே தடுத்தால் அவுட் எனவும், ஆனால் தன் மீது பந்து பட்டு காயம் ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடுத்தால் அது அவுட் இல்லை எனவும் கூறுகிறது.
இவ்விவகாரத்தைப் பொறுத்த வரை, பந்தை அவ்வளவு வேகமாக எதிர்கொண்ட ஸ்டோக்ஸ், இயல்பாகவே எதிர்வினையாற் றினார் எனக் கொள்ளலாம். ஆனாலும், பந்து அவரை விட்டுத் தள்ளிச் சென்றபோதும் கையால் தடுத்துள்ளதால் அவுட் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு சாதக மாக அளிக்கப்படவில்லை. ஆஸ்தி ரேலிய கேப்டன் ஸ்மித், தனது முறையீட்டைத் திரும்பப் பெற்றி ருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஸ்மித் இதுதொடர்பாகக் கூறும்போது, “நேரடியாக பந்து ஸ்டம்பைத் தாக்கவிருந்தது, ஆனால் ஸ்டோக்ஸ் வேண்டு மென்றே தடுத்தார் என்று விக்கெட் கீப்பர் வேட் கூறினார். என்னைப் பொறுத்தவரை ஸ்டோக்ஸ் கிரீஸைத் தாண்டி வந்து விட்டார், அவர் கையை நீட்டி வேண்டுமென்றேதான் தடுத்தார். 3வது நடுவர் அவுட் கொடுத்தார் அவ்வளவே” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கிலாந்து கேப்டன் மோர்கனோ, “5 அடி தொலை விலிருந்து பந்தை வீசும்போது இயல்பாக என்ன செய்வோமோ அதனைத்தான் ஸ்டோக்ஸ் செய்துள்ளார். அது அவுட் கொடுக்கப்படவேண்டியதில்” எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன், ஸ்டோக்ஸுக்கு அவ்வாறு அவுட் கொடுக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago