ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபு தாபி நகரில் 13-வது சீசன் ஐபிஎல்டி20 தொடர் இன்று ரசிகர்களின் ஆரவாரம் இன்றி தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் தனிப்பட்ட வீரர்கள், சாதனை, விக்கெட் வீழ்த்திய சாதனை குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.
பேட்டிங்கில் சாதனை…..
» ஐபிஎல் டி20 தொடர்; அணிகளின் மறக்க முடியாத வித்தியாசமான சாதனைகள்: ஓர் பார்வை
» சுரேஷ் ரெய்னா புதிய திட்டம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் திடீர் சந்திப்பு
அதிகமான ரன்கள்
ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்களி்ல ஆர்சிபி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை விராட் கோலி 5,412 ரன்கள் குவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 5,368 ரன்களும், மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா 4,898 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார்.
அதிகமான சிக்ஸர்கள்
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் ேம.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் வரலாற்றில் அதிகமான சிஸ்கர் அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை கெயில் 326 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் ஆர்சிபி வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் 357 சிக்ஸர்களுடனும், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 297 சிக்ஸர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்
ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட வீரர் ஒருவர் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்திருப்பது மே.இ.தீவுகள் கிறிஸ் கெயில்தான். 2013-ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளில் 175 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கெயில் அடித்ததுதான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகமான சதமாகும்.
அடுத்தாக கொல்க்ததா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான பிரன்டன் மெக்கலம் 158 ரன்களும், ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் 133 ரன்களும் சேர்த்து 3-வது இடத்தில் உள்ளார்.
அதிகமான சதங்கள்
ஐபிஎல் தொடரில் அதிகமான சதங்கள் அடித்த வீரர்களில் மே.இ.தீவுகள் வீரர் கெயில்தான் முதலிடம் பெறுகிறார். இதுவரை கெயில் 6 சதங்கள் அடித்துள்ளார். அடுத்ததாக ஆர்சிபி கேப்டன் கோலி 5 சதங்களும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 4 சதங்களும் எடுத்துள்ளனர். வார்னர் இதுவரை 44 அரைசதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.
அதிவேக அரைசதம்
கடந்த 2018-ம் ஆண்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதமாகும். அதைத் தொடர்ந்து 2014-ல் யூசுப் பதான் 14 பந்துகளிலும், 2017-ம் ஆண்டில் சுனில் நரேன் 15 பந்துகளிலும் அரைசதம் அடித்துள்ளனர்.
பந்துவீச்சில் சாதனைகள்
அதிகமான விக்கெட்
ஐபிஎல் வரலாற்றில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். இவரின் எக்கானமி 7.14 ஆகும். அதைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா 157 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சிறந்த பந்துவீச்சு
சிறந்தபந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர்களில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோஸப் உள்ளார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வேப்பந்துவீச்சாளர் சோஹைல் தன்வீர் 2008-ல் சிஎஸ்ேக அணிக்கு எதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வதாக 2016-ம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் வீரர் ஆடம் ஸம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதிகமான ஹாட்ரிக் விக்கெட்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா அதிகமான ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை 147 போட்டிகளில் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை மிஸ்ரா எடுத்துள்ளார். அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் வீரர் யுவராஜ் சிங் 2 ஹாட்ரிக் விக்கெட்டும், சிஎஸ்கே வீரர் சாம் கரன் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்துள்ளார்.
அதிகமான 4 விக்கெட்டுகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் அதிகமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை 110 போட்டிகளில் 6-க்கும் மேற்பட்ட முறை 4 விக்கெட்டுகளை நரேன் கைப்பற்றியுள்ளார். இவரின் எக்கானமி 6.67. அடுத்ததாக மலிங்கா 6 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிகமான மெய்டன் ஓவர்கள்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பல்வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடியவருமான பிரவீண் குமார் 119 போட்டிகளில் 14 மெய்டன் ஓவர்கள் வீசிமுதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக முன்னாள் வீரர் இர்பான் பதான் 10 மெய்டன்களையும், மும்பை இந்தியன்ஸ் வீரர் தவால் குல்கர்னி 8 மெய்டன்களையும் வீசி 3-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago