ஹைதராபாதை பதம் பார்த்த பஞ்சாப் பேட்டிங்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

By செய்திப்பிரிவு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபில் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

206 ரன்கள் என்ற கடினமான இலக்கை பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே கடந்தது. அந்த அணியின் வீரர்கள் வோஹ்ரா, சாஹா, மேக்ஸ்வெல், மில்லர் மற்றும் பெய்லி அனைவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இலக்கை விரட்ட களமிறங்கிய சேவாக், இன்னிங்ஸின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினாலும் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சாஹா, வோஹ்ரா ஜோடி, மில்லர் மேக்ஸ்வெல் ஜோடியின் ஆட்டத்தை பிரதிபலிக்குமாறு ஆடியது.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சிதறடித்த இந்த இணை 7 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 95 ரன்களுக்கு எடுத்துச் சென்றது. சாஹா 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். 8-வது ஓவரின் முதல் பந்தில் சாஹா 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல், அந்த ஓவரிலேயே 3 சிக்ஸர்களை விளாசி தனது கணக்கை ஆரம்பித்தார்.

10-வது ஓவரில் துரதிர்ஷ்டவசமாக வோஹ்ரா 47 ரன்களுக்கு (20 பந்துகள், 5 பவுண்டரி, 2 சிக்ஸர்) ரன் அவுட் ஆனார். வழக்கத்திற்கு மாறாக மேக்ஸ்வெல், மில்லர் இணை சிறிது நிதானித்தே ஆடியது. 12 ஓவர்களிலேயே 156 ரன்களை எட்டியதால் பஞ்சாப் அணியே வெற்றி பெறும் என்பது அந்த கட்டத்தில் உறுதியானது.

ஆனால் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் விடாமல் போராடி, பஞ்சாப் அணியின் ரன் சேர்ப்பு வேகத்தை கட்டுப்படுத்தினர். 14-வது ஓவரில் 43 ரன்களுக்கு மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, ஆட்டத்தை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதை உணர்ந்த ஹைதராபாத் தனது பந்துவீச்சை வலுப்படுத்தியது.

சில ஓவர்கள் பொறுமையாக ஆடிய பெய்லி - மில்லர் ஜோடி ஸ்டெய்ன் வீசிய 18-வது ஓவரில் விட்ட அதிரடியைத் தொடர்ந்தது. அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்கள் சேர 2 ஓவர்களில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என பஞ்சாபின் கைக்குள் ஆட்டம் வந்தது. அடுத்த ஓவரின் 4-வது பந்தில் பெய்லி சிக்ஸருடன் வெற்றிக்கான ரன்களை எடுத்தார். பெய்லி 19 பந்துகளில் 35 ரன்களுடனும், மில்லர் 24 பந்துகளில் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் கேப்டன் பெய்லி முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் 4 ஓவர்கள் சாதுவாகச் சென்றது. ஜான்சன் நன்றாக வீசினார். சன் ரைசர்ஸ் முதல் 4 ஓவர்களில் 23 ரன்களையே எடுத்தது. 5-வது ஓவரை வீச வந்தார் சந்தீப் சர்மா. அவரது கெட்ட நேரம் துவங்கியது. தவான் உள்ளே புகுந்தார். முதல் பந்து நோ-பால் அதனை பின்ச் அடிக்க பேக்வர்ட் பாயிண்ட் திசையில் மேக்ஸ்வெல் பின்னால் சென்று டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அனைவரும் அவரை நோக்கி கொண்டாட்டத்தில் ஓட நடுவர் குல்கர்னியோ நோ-பால் என்றார்.

அடுத்த பந்து மீண்டும் நோ-பால் தவான் நேராக பவுண்டரி அடித்தார். அடுத்து 4,6,4,4 என்று தவான் விளாசினார். அந்த ஓவரில் 26 ரன்கள் வந்தது. அடுத்த ஓவர் ஜான்சன் 6 ரன்களையே கொடுக்க பவர் பிளே முடிவில் சன் ரைசர்ஸ் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது.

பிறகு ஸ்பின்னர்கள் ஷிவம் சர்மா, படேல் வீச வந்தனர். ஒரு சிக்சரை மட்டும் தவானால் அடிக்க முடிந்தது. 8 ஓவர்கள் முடிவில் 65/1. 9வது ஓவர் ஷிவம் சரமா வீச நேராக வேகமாக வந்த பந்தை பின்ச் ஒதுங்கிக் கொண்டு கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார். ஃபின்ச் 20 ரன்களுக்கு அவுட்.

பிறகு சில சிக்கனமான பந்துகள் தொடர 10 ஓவர்களில் 72/1 என்றே இருந்தது சன் ரைசர்ஸ். அதாவது பவர் பிளேயிற்கு பிறகு 4 ஓவர்களில் 17 ரன்களே வந்ததோடு ஏரோன் பின்ச் விக்கெட்டும் எடுக்கப்பட்டது. நமன் ஓஜா களமிறங்கி ஷிவம் சர்மாவை ஒரு சிக்சர் அடித்தார். 12வது ஓவரில் 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த தவான் மோசமான பந்தை நேராக ஷாட் ஃபைன்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

12வது ஓவரில் ஸ்கோர் 92/2 என்று இருந்தது. கடைசி 8 ஓவர்களில் 113 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. காரணம் டேவிட் வார்னர் ஓஜாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து 7 ஓவர்களில் 81 ரன்களை விளாசினர். ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கினார் நமன் ஓஜா, டேவிட் வார்னர் மிட்செல் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. ஒரே ஓவரில் இரண்டு அபாரமான பவுண்டரிகளை அடித்தார் வார்னர். அதில் வேக ஷாட் பிட்ச் பந்தை ஒரு சுற்று சுற்றி புல் ஆடியது அபாரம்.

சிவம் சர்மாவை இரண்டு சிக்சர்களுடன் ஓஜா அடிக்கத் தொடங்கினார். வார்னரும் ரிஷி தவானை ஒரு சிக்சர் தூக்கினார். 17வது ஓவர் முடிவில் 149/2 என்று இருந்தது ஸ்கோர். 18வது ஓவரில் படேலை வார்னர் இரண்டு சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசினார். 23 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்த வார்னர் 19வது ஓவரில் ஓஜாவின் கோளாறான ரன்னிங்கினால் ரன் அவுட் ஆகி வெறுப்பில் முனகிக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

19வது ஓவரை சந்தீப் சர்மா வீச அந்த ஓவர் படுமோசமாக அமைய 26 ரன்களை விளாசினார் ஓஜா. 20 வது ஓவரில் 12 ரன்கள் வந்தது. சன் ரைசர்ஸ் 205 ரன்கள் எடுத்தது. ரிஷி தவான், சந்தீப் சர்மா, படேல் ஓவருக்கு 10 ரன்களுக்குமேல் கொடுத்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடியாக இலக்கைத் துரத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்