யுஎஸ் ஓபன்: 2-வதுமுறையாக ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவுக்கு சாம்பியன் பட்டம் : போராடி வீழ்ந்தார் அசரென்கா

By செய்திப்பிரிவு


அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நோமி ஒசாகா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி இந்த பட்டத்தை ஒசாகா கைப்பற்றினார்.

தன்னுடைய முதல் 3 கிராண்ட்ஸ்லாம் பைனலிலும் தோல்வி அடையாமல் சாம்பியன் பட்டம் வென்ற வீாரங்கனை எனும் பெயரை ஜெனிபர் கேப்ரியாட்டிக்குப்பின் ஒசாகா பெற்றார். ஜெனிபர் கேப்ரியாட்டி, 2001-ல் ஆஸ்திரேலியன் ஓபன்,2001 பிரெஞ்சுஓபன் ,2002ல் ஆஸி.ஓபன் பட்டத்தை வென்றிருந்தார்.

சாம்பியன் ஒசாகா, 2-ம் இடம் பெற்ற அசரென்கா

அமெரி்க்காவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஜப்பானிய வீராங்கனை நோமி ஒசாகாவை எதிர்த்து பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினார்.

இருவரும் தொடக்கம் முதலே நீயா, நானா என்ற ரீதியால் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். ஒருமணிநேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அசரென்காவை 1-6, 6-3, 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தினார் ஒசாகா.

முதல் செட்டில் வலுவாக விளையாடிய அசெரன்கா ஒரு கேமை மட்டும் விட்டுக்கொடுத்து, 27 நிமிடங்களில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

ஆனால், சுதாரித்து ஆடிய ஒசாகா அடுத்த இரு செட்களிலும் தனதுவலுவான முன்கை ஆட்டம், பந்தை திருப்பி அனுப்புதலில் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, தலா 3 கேம்களை இரு செட்களில் விட்டுக்கொடுத்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த யுஎஸ் ஓபனில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை 22 வயதான நோமி ஒசாகா வென்றிருந்தார். இப்போது 2-வது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை சூடி ஒசாகா மகிழ்ந்தார். ஒசாவுக்கு இது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ஆனால், கடந்த 2012, 2013-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனில் 2-ம் இடம் பிடித்திருந்த அசரென்கா இந்த முறையாவது கோப்பையை வெல்லலாம் என்று கனவுடன் இருந்த நிலையில் அந்தக் கனவையும் சிதறடித்தார் ஒசாகா.

31வயதாகும் பெலராஸ் வீராங்கனை அசெரன்கா கடந்த 7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் யுஎஸ் ஓபனில் இறுதி்ச்சுற்றுவரை முன்னேறியது வியப்புக்குரியதாகும், பாராட்டுக்குரியதாகும்.

யுஎஸ் ஓபனில் இறுதி ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒரு வீராங்கனை முதல் செட்டை இழந்து அதன்பின் இரு செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றது கடந்த 26 ஆண்டுகளுப்பின் இதுதான் முதல்முறையாகும்.

கடைசி யாக கடந்த 1994-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு வீராங்கனை அரென்டா சான்செஸ் விகாரியோ இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை இழந்து அடுத்த இரு செட்களையும் வென்று கோப்பையை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்