வலுவாகும் கேகேஆர் அணி: முதல் போட்டியிலேயே இரு முக்கிய வீரர்கள் இணைவதால் புத்துணர்ச்சி

By பிடிஐ


ஐக்கியஅரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இரு நட்சத்திர வீரர்கள் முதல் போட்டியிலேயே இணைகின்றனர் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வீரர் எயின் மோர்கன், ஆஸி அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் இருவரும் 23-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்திலேயே அணியில் இணைகிறார்கள் என்று கேகேஆர் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

இருவீரர்களுக்கும் தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களாக இருந்த நிலையில் இரு வீரர்களும் இங்கிலாந்தில் நடக்கும் ஒருநாள் தொடரில் பயோ-பபுள் பகுதியில் இருந்தவாறு வருவதால், 6 நாட்கள் தனிைமயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ், அதிரடி வீரர் மோர்கன் இருவரின் வருகை கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பலமாகஅமையும்.

இதுகுறித்து கேகேஆர் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் கிரிக் இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், டாம் பான்டம், ஆஸி வீரர் கம்மின்ஸ், இருவரும் பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து ஐபிஎல் தொடருக்கு வருவதால், அவர்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நாட்களை 14 நாளிலிருந்து 6 நாட்களாகக் குறைத்துள்ளோம். இன்னும் குறைப்பது குறித்து பிசிசிஐ அமைப்பிடம் பேசி வருகிறோம்.

இவர்கள் மூவரும் 17-ம் தேதி அபுதாபிக்கு தனிவிமானத்தில் வருகின்றனர். 23-ம்தேதி முதல் ஆட்டம் நடக்கிறது. 6 நாட்கள் தனிமையில் இருந்தாலும் பயிறச்சியில் ஈடுபட முடியாது என்பதால் நாட்களை குறைப்பது குறித்து பேசி வருகிறோம். இதேபோல மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் சிபிஎல் டி20 தொடரில் விளையாடும் வீரர்களும் ஐபிஎல் தொடருக்கு வந்தாலும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டால் போதுமானது ” எனத் தெரிவித்தார்.

அபு தாபி நகரில் கடினமான கரோனா விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐபிஎல் வீரர்கள் என்பதால், 6 நாட்கள் தனிமைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், துபாயக்குச் செல்பவர்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆதலால், துபாய்க்கு செல்லும் வீரர்களுக்கு கரோனா இல்லாவிட்டால் முதல்நாளிலிருந்தே அணியில் இணையலாம்.

இதில் கேகேஆர், மும்பை அணிகள் மட்டுமே அபு தாபியில் தங்கியுள்ளன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இங்கிலாந்து, ஆஸி, வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. மற்ற 6 அணிகளும் துபாயில் தங்கியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்