அமெரிக்க ஓபனில் பென்னட்டா சாம்பியன்: டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்தார்

By ஏஎஃப்பி, ஏஎன்ஐ

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றை யரில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டா சாம்பியன் பட்டம் வென்றார். அவர் சக வீராங்கனை ராபெர்ட்டா வின்சியை 7-6 (7/4), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

நடப்பாண்டின் இறுதி கிராண்ட்ஸ் லாம் போட்டியான அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையரில் இத்தாலியைச் சேர்ந்த பிளாவியா பென்னட்டாவும், மற்றொரு இத்தாலி வீராங்கனையான ராபர்டா வின்சியும் மோதினர். இருவருக்குமே இதுதான் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி ஆகும்.

முதல் செட்டில் இருவருமே கடுமையாகப் போராடியதால் டைபிரேக்கர் வரை சென்றது. இதில், 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் பென்னட்டா வென்றார். இரண்டாவது செட்டில் பென்னட்டா ஆதிக்கம் செலுத்தி 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

இது ஒற்றையர் பிரிவில் அவர் பெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஓபன் எராவில் அதிக வயதில் (33) கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற பெருமையும் அவர் வசமானது.

ஓய்வு

இந்த வெற்றியுடன் டென்னி ஸிலிருந்து பென்னட்டா ஓய்வு பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இந்தப்பட்டத் தை வெல்வதன் மூலம் என் கனவு நனவாகியுள்ளது. இனி ஓய்வு பெறப்போகிறேன்.

இம்முடிவை தொடர் தொடங் குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே எடுத்து விட்டேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இத்தொ டரில் பட்டம் வெல்வேன் என நினைக்கவில்லை. இது எனக்கு மிகப்பெரும் ஆச்சரி யத்தை அளிக்கிறது” எனத் தெரி வித்துள்ளார்.

பென்னட்டா ஒற்றையரில் மிகப்பெரிய பட்டத்தைப் பெறும் 2-வது இத்தாலி வீராங்கனை ஆவார். முன்னதாக, 2010-ல் இத்தாலியின் பிரான்ஸெஸ்கா ஷியாவோன் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றார்.

பென்னட்டாவுக்கு வெற்றிக் கோப்பையுடன் 33 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.21.84 கோடி) ரொக்கப்பரிசு வழங்கப் பட்டது. வின்ஸிக்கு 10.59 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. வின்ஸி அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் இரட்டையர்

ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் பியர்ரி ஹியூகஸ் ஹெர்பெர்ட் நிகோலஸ் மாஹுட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டி தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்த இந்த ஜோடி, பிரிட்டனின் ஜேமி முர்ரே- ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் ஜோடியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.

பியர்ரி-நிகோலஸ் ஜோடிக்கு இதுவே முதல் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் ஆகும். ஆஸ்திரேலிய ஓபனில் இந்த ஜோடி இறுதிச் சுற்றுவரை முன்னேறி தோல்வியுற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்