இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளைத் தோற்று தொடரையும் முதலிடத்தையும் இழந்த ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒயிட் வாஷைத் தவிர்த்ததோடு மீண்டும் டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
146 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் 70/1 என்று அதிரடி ஆட்டம் ஆடியது. வெற்றி எளிதானது என்று ஓடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வண்டியில் இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் ரஷீத் பிரேக்கை அழுத்தினார். ஆனால் கடைசியில் 19.3 ஒவர்களில் 146/5 என்று ஆஸ்திரேலியா வென்றது. இங்கிலாந்து தொடரை 2-1 என்று கைப்பற்றியது
அற்புதமான அந்த ஸ்பெல்லில் ரஷீத் (3/21), மேக்ஸ்வெல், பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்ற 100/5 என்று சற்றே ஆஸி.க்கு இன்னொரு சரிவு அபாயம் ஏற்பட்டு தோல்வி பயம் கண்டது.
ஆனால் மிட்செல் மார்ஷுக்கு ரஷீத் பந்தில் இருமுறை டேவிட் மலான் கேட்சை விட்டார். இதனையடுத்து மார்ஷ் 39 நாட் அவுட், ஆஷ்டன் ஆகர் 16 நாட் அவுட் என்று இன்னும் 3 பந்துகள் மீதமிருக்க ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். இங்கிலாந்து 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.
» தோனிக்காக ரூ.1,800 கொடுக்க முன் வந்த ரசிகர்கள்: ஏற்காத ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம்
» நீங்கள் இல்லாமல் சிஎஸ்கே-வை நினைத்துப் பார்க்க முடியவில்லை: ரெய்னாவுக்காக உருகும் ரசிகர்கள்
பட்லருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதோடு இயான் மோர்கன் காயம் காரணமாக ஆடவில்லை. மொயின் அலி இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். ஒயிட் வாஷ் கொடுத்திருந்தால் இங்கிலாந்து டி20 நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியிருக்கும். இதனையடுத்து ஜானி பேர்ஸ்டோ 55 ரன்களையும் மொயின் அலி (23), டென்லி (29) ஆகியோர் பங்களிப்பில் இங்கிலாந்து 145/6 என்று முடிந்தது. ஆஸி. தரப்பில் ஆடம் ஸாம்ப்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டார்க், ஹேசில்வுட், ரிச்சர்ட்சன், ஆகர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இல்லை, மேத்யூ வேட், பிஞ்ச் தொடக்கத்தில் களமிறங்கினர்.
முன்னதாக டாஸ் வென்ற பிஞ்ச் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். டாம் பேண்ட்டன் தொடக்கத்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டாலும் பட்லர் அளவுக்கு அதிவேக தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை. 2 ரன்களில் ஹேசில்வுட்டிடம் வெளியேறினார் பேண்ட்டன். பேர்ஸ்டோ திணறினார் மட்டை சுழற்றலெல்லாம் சரியாக பந்து படாத தருணமாகவே அமைந்தது.
டேவிட் மலான் வழக்கம் போல் நன்றாக ஆடி 21 ரன்களில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் அபார கேட்சுக்கு வெளியேறினார். சாம் பில்லிங்ஸ் விக்கெட்டையும் மலானுக்கு அடுத்த படியாக சாம்ப்பா வீழ்த்தினார். ரிவர்ஸ் ஸ்வீப் சரியாகச் சிக்கவில்லை. பிஞ்ச்சிடம் கேட்ச் கொடுத்து பில்லிங்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு பேர்ஸ்டோ ஸ்லாக் ஸ்வீப்பில் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். இன்னொரு சிக்சரை அடித்து 41 பந்துகளில் அரைசதம் கண்டார் பேர்ஸ்டோ. 44 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்த பேர்ஸ்டோ, ஆகர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை டாப் எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 23 ரன்களில் அருமையான நேர் சிக்ஸ் அடித்தார். இந்த முறை ஸ்மித் பவுண்டரியில் அதிசயமான கேட்சை எடுத்தார்.
18வது ஓவரில் டென்லி (29), 3 பவுண்டரிகளை அடிக்க (மூன்றுமே எட்ஜ் பவுண்டரிகள், இரண்டு வெளிப்புற எட்ஜ், ஒன்று உட்புற எட்ஜ்) இங்கிலாந்து 145/6 என்று முடிந்தது.
மேத்யூ வேட், ஜோப்ரா ஆர்ச்சரை டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் ஒரு அதிர்ச்சி சிக்சரை அடிக்க அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது. ஆனால் 14 ரன்களில் மார்க் உட் பந்தை புல் ஷாட் ஆட முயன்று சரியாகச் சிக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஆனால் பிஞ்ச் (39), ஸ்டாய்னிஸ் (26) என்று விளாச ரன்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது டாம் கரண் ஸ்லோ பந்தில் ஸ்டாய்னிஸை வெளியேற்றி முதல் பிரேக்கைப் போட்டார். கிளென் மேக்ஸ்வெல் 6 ரன்களில் ரஷீத் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று வெளியேறினார். பிஞ்ச்சுக்கு விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஒரு அருமையான, எளிதான கேட்ச் வாய்ப்பை விட்டார். ஆனால் சற்றும் தளராத ரஷீத் கூக்ளியில் பிஞ்ச்சின் லெக் ஸ்டம்பைப் பெயர்க்க 39 ரன்களில் வெளியேறினார்.
மிட்செல் மார்ஷுக்கு மலான் இருமுறை கேட்ச் விட்டார். ஆனால் மீண்டும் மனம் தளராத ரஷீத், ஸ்டீவ் ஸ்மித் (3) விக்கெட்டைக் காலி செய்தார். மார்ஷ், ஆகர் ரன் விகிதத்தைக் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை, அதனால் மார்க் உட் பந்தை மிட்செல் மார்ஷ் கவலைப்படமால் தூக்கி சிக்சருக்கு அடிக்க முடிந்தது. 19வது ஓவரில் ஆகர், டாம் கரணை ஒரு பவுண்டரி அடிக்க கடைசி ஓவரில் 1 ரன் வெற்றிக்குத் தேவை என்ற நிலை இருந்தது. ஜோர்டான் முதல் 2 பந்தை ரன் கொடுக்காமல் வீச, கடைசியில் வேகமாக ஓடி எடுத்த சிங்கிளில் ஆஸ்திரேலியா வென்றது.
ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷும், தொடர் நாயகனாக பட்லரும் தேர்வு செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago