ஜோஸ் பட்லர் அதிரடி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து 

By செய்திப்பிரிவு

ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் ஆகியோரின் பொறிபறக்கும் தொடக்கப் பந்து வீச்சு பிறகு ஜோஸ் பட்லர் 54 பந்துகளில் 77 ரன்கள் விளாசியது ஆகியவற்றால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தி டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுக்க, இலக்கை விரட்டிய இங்கிலாந்து 158/4 என்று வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் 3 பந்துகளில் டக் அவுட் ஆனார். ஆர்ச்சரின் அபாரமான பந்து வார்னரின் கிளவ்வில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 2 ரன்களில் மார்க் உட் வெளியேற்றினார், இந்த கேட்சையும் பட்லர்தான் பிடித்தார் 3/2 என்று ஆஸ்திரேலியா தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித் இறங்கி அதிரடியாக ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசி 10 ரன்களில் இயன் மோர்கனின் அபார பீல்டிங் மற்றும் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக ஆஸ்திரேலியா 30/3 என்று ஆனது.

ஏரோன் பிஞ்ச் (40), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (35) இணைந்து 4வது விக்கெட்டுக்காக 49 ரன்களைச் சேர்த்தனர். கிளென் மேக்ஸ்வெல் 18பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ஆகர் 23, கமின்ஸ் 13 ஆகியோர் விளாசலில் ஈடுபட கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் வந்ததில் 157/7 என்று ஆஸ்திரேலியா முடிந்தது. ஆர்ச்சர், உட் தலா 1 விக்கெட்டை கைப்பற்ற, ஜோர்டான் 2 விக்கெட்டுகளையும் ஆதில் ரஷீத் சிக்கனமாக வீசி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆனால் அதிரடி இங்கிலாந்துக்கு 158 ரன்கள் இலக்கு என்பது ஒன்றுமில்லாமல் போனது. பேர்ஸ்டோ 9 ரன்களில் ஸ்டார்க் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடும் முயற்சியில் மட்டையால் லெக் ஸ்டம்பை இடிக்க ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். டாம் பேண்ட்டன் ரன்களிலும், மோர்கன் 7 ரன்களிலும் வெளியேறினர்.

ஆனால் ஜோஸ் பட்லர் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 77 ரன்களையும் டேவிட் மலான் மீண்டுமொரு அற்புதமான இன்னிங்ஸில் 32 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களையும் எடுத்து 2வது விக்கெட்டுக்கு இருவரும் 87 ரன்கள் விளாசினர்

மொயின் அலி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை வெற்றிக்கு இட்டுச் சென்றனர், ஆடம் ஸாம்ப்பவை சிக்ஸ் அடித்து மொயின் அலி முடித்து வைத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆகர் 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் ஸாம்பா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட இங்கிலாந்து டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

நாளை செவ்வாய் கிழமை ஒயிட் வாஷைத் தவிரக்க ஆஸ்திரேலியா கடுமையாகப் போராட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்