அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் செட்டை இழந்து அதிர்ச்சியடைந்தாலும், மனம்தளராமல் 2-வது, 3-வது செட்களைக் கைப்பற்றி சகநாட்டு வீராங்கனை சுலோன் ஸ்டீபன்ஸை வெளியேற்றினார் வில்லியம்ஸ்.
23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, 24-வது சாதனை பட்டத்துக்காக செரீனா போராடி வருகிறார் ஆனால், அவரால் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த முறை 24-வது பட்டத்தை செரீனா வெல்வார் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் ரசிகர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் வழக்கமான கைதட்டல், கூக்குரல் ஏதுமின்றி அமைதியான சூழலில் நடத்தப்பட்டுவருகிறது.
» முதல் டி20: கடைசி பந்து வரை த்ரில்- 14 ஓவர்களில் 124/1-லிருந்து ஆஸி. சரிவு- இங்கி. அபார வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் அமெரிக்க வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான சுலோன் ஸ்டீபன்ஸை எதிர்த்துக் களமிறங்கினார் செரீனா வில்லியம்ஸ்.
இருவரும் தொடக்கத்திலிருந்தே ஒருவொருக்கொருவர் சளைக்காமல் மோதிக் கொண்டனர்.
ஸ்டீபன்ஸ் ஆட்டத்தில் இருந்த வேகம், செரீனாவுக்கு முதல் செட்டில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. முதல் செட்டில் செரீனாவுக்கு இரு கேம்களை மட்டும் விட்டுக்கொடுத்த ஸ்டீபன்ஸ் 2-6 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இருவரும் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பின் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவில்லை என்பதால், ஆட்டம் பரபரப்பாகக் காணப்பட்டது.
ஆனால், செரீனா வில்லியம்ஸ் தான் தவறு செய்வதை உணர்ந்து, 2-வது செட்டிலிருந்து தனது வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பினார். ஸ்டீபன்ஸ் எதிர்பார்த்திராத ஆட்டத்தை செரீனா வெளிப்படுத்தினார்.
பந்தை திருப்பி அனுப்புவதில் அசுரத்தனமான வேகம், சர்வீஸ்கள் வீசுவதில் மின்னல் வேகம் என ஸ்டீபன்ஸை நிலைகுலையச் செய்தார் செரீனா. அதிலும் செரீனா வீசிய சர்வீஸ் ஏஸ்கள் மணிக்கு 122 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்ததால், ஸ்டீபன்ஸால் எதிர்கொள்ள முடியவில்லை.
2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றிய செரீனா, 3-வது செட்டையும் 6-2 என்ற கணக்கில் தனதாக்கினார். செரீனா 2-வது,3-வது செட்களில் மட்டும் 12 ஏஸ்களை வீசி ஸ்டீபன்ஸைத் திக்குமுக்காடச் செய்தார்.
காலிறுதிக்குத் தகுதி பெறக்கூடிய 4-வது சுற்று ஆட்டத்தில் கிரேக்க நாட்டு வீராங்கனை மரியா சக்காரியுடன் செரீனா வில்லியம்ஸ் மோதவுள்ளார். செரீனாவுடன் 4-வது சுற்றில் மோத இருக்கும் சக்காரி, தனது 3-வது சுற்றில் 19 வயது அமெரிக்க வீராங்கனை அமான்டா அனிசமோவாவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழத்தினார் என்பது குறப்பிடத்தக்கது.
மேலும், 4-வது சுற்றுக்குத் தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் எலிசி மெர்டென்ஸ், 20-வது இடத்தில் உள்ள கரோனாலினா மச்சோவா, வெட்டானா பிரோன்கோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர். ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், மெட்டியோ பெர்ரிடினி, ஆன்ட்ரே ருபெல்வ், பெலிக்ஸ் அலியாஸ்மி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago