ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அந்த அணியை வீழ்த்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
"ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு, எனவே நாங்கள் 100%-க்கும் மேல் பங்களிப்பு செய்து வெற்றிக்கான வாய்ப்புகளை சாத்தியமாக்குவோம்” என்றார்.
ஒருநாள் போட்டிகளில் வளர்ந்து வரும் வங்கதேசம், தொடர்ச்சியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரன இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றது. டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வேயை 3-0 என்று வீழ்த்தியது வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை இழ்ந்தது.
“ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்று சீசனை முடிப்பது மனநிறைவை அளிக்கும். 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்தது, நாங்கள் 4 நாட்கள் தாங்குவோமா என்று பலரும் கேட்டனர். அந்த அணியையே ஃபாதுல்லா டெஸ்ட் போட்டியில் அப்போது வெற்றி பெறும் நிலைக்கு வந்தோம். எங்களது அப்போதைய அணியே வலுவான ஆஸ்திரேலியாவை வெற்றி பெற நெருங்கிச் செல்ல முடிந்தது எனில் இப்போதைய எங்கள் அணியினால் ஏன் முடியாது?
எங்கள் ஒருநாள் போட்டி அணி போல் நாங்கள் டெஸ்ட் போட்டியில் எழுச்சி பெற வேண்டும். எங்கள் கிரிக்கெட் அணி இந்தக் கட்டத்துக்கு வந்த பிறகு எதிர்பார்ப்புகள் நிறையவே உள்ளன.
வேகப்பந்து வீச்சில் நிறைய தெரிவுகள் உள்ளன. இது வங்கதேச கிரிக்கெட்டுக்கு பெரிய செய்திதான். இந்த ஆண்டில் நிறைய போட்டிகளை வேகப்பந்து வீச்சாளர்களே வெற்றி பெற்று கொடுத்தனர். எனவே வேகப்பந்தையும், சுழற்பந்தையும் சரியான அடிப்படையில் கலந்து, பேட்ஸ்மென்களும் சோபித்தால் நான் நினைக்கிறேன் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று.
இந்த ஆஸ்திரேலிய அணி இளம் அணி, ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியா என்பதை நாம் மறக்கக் கூடாது. ஸ்மித் மிகச்சிறந்த வீரர், மேக்ஸ்வெல் ஒரு அதிரடி வீரர், இவர்கள் இருவரையும் நெருக்கடிக்குள்ளாக்குவோம்.
நேதன் லயன் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆனால் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிருக்கு எதிராக எப்படி செயல்பட்டோமோ அப்படியே சில திட்டங்களை நேதன் லயனுக்கும் வைத்துள்ளோம்” என்றார்.
செப்டம்பர் 28-ம் தேதி ஆஸ்திரேலியா அணி வங்கதேசம் வருகிறது. அக்டோபர் 9-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் தொடங்குகிறது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago