சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. கடைசி பந்து வரை இந்தப் போட்டி த்ரில் போட்டியாக அமைந்தது.
163 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 124/1 என்று 14 ஓவர்களில் எளிதான வெற்றி நிலையில் இருந்தது. கடைசியில் 160/6 என்று எப்படி முடிந்தது என்பதுதான் புரியாத புதிர்.
‘நல்லாத்தானே போய்கிட்டிருக்கு’ என்று ஆஸ்திரேலியர்கள் நினைத்த போது 14 பந்துகளில் 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. இதனையடுத்து கடைசி 3 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது, டி20-யில் இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஆனால் விக்கெட்டுகள் போய்க்கொண்டே இருந்தால் கடினம்தான். கடைசி 2 ஓவரகளில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரில் 4 ரன்களே வந்தது, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை டாம் கரன் அந்த ஓவரை வீசினார்.
இதில் 2வது பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கவர் திசையில் ஒரு பெரிய சிக்சரை அடித்து நெருக்கினார், 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஆனால் இன்னொரு பவுண்டரி அடிக்க முடியவில்லை. 2 ரன்கள் குறைவாக முடிந்தது.
» சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒதுக்கப்பட்டார்: இந்த ஐபிஎல் தொடரிலும் வர்ணனைக்கு வாய்ப்பு வழங்கவில்லை
163 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, கேப்டன் ஏரோன் பிஞ்ச் (46), வார்னர் (58) ஆகியோர் மூலம் 98 ரன்கள் அதிரடி தொடக்கம் கண்டது. வார்னர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்களையும் சேர்க்க முதலில் பிஞ்ச், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆர்ச்சரிடம் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸுடன் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டில் அடில் ரஷீத் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறி சரிவைத் தொடங்கி வைத்தார். அதே ஓவரில் ரஷீத் 1 ரன்னில் கிளென் மேக்ஸ்வெலை வீழ்த்தினார், மேக்ஸ்வெல் அடித்தது அந்தக் கட்டத்தில் வேஸ்ட் ஷாட்.
அடுத்ததாக வார்னர் 58 ரன்களில் ஆர்ச்சர் பந்தை ஒதுங்கிக் கொண்டு ஆட முற்பட பந்து கால்காப்பைத் தாக்கி ஸ்டம்பைத் தாக்கியது. பவுல்டு ஆனார். அலெக்ஸ் கேரியை 1 ரன்னில் மார்க் உட் வேகமான பந்தில் பவுல்டு செய்தார். ஆஷ்டன் ஆகர் 4 ரன்களில் முக்கியக் கட்டத்தில் ரன் அவுட் ஆனார். 19 ஓவர்கள் முடிவில் 148/6 என்ற நிலையில் கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் ஒரு சிக்சரைத்தவிர பவுண்டரி அடிக்க முடியவில்லை 2 ரன்களில் ஆஸ்திரேலியா தோற்ற போது ஸ்டாய்னிஸ் 23 ரன்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார், வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா, ஆனால் மோர்கனின் கேப்டன்சி அருமையாய இருந்தது.
முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 162/7 என்று முடிந்தது, டேவிட் மலான் 66 ரன்களையும் பட்லர் 44 ரன்களையும் எடுத்தனர். ஜோர்டான் (14) நீங்கலாக மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கமே எட்டவில்லை, கேன் ரிசர்ட்ஸன் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
2016க்குப் பிறகு இங்கிலாந்து வெற்றிகரமாக 180 ரன்களுக்கும் குறைவான இலக்கை தடுத்துள்ளது. ஞாயிறன்று நடைபெறும் 2வது போட்டியில் இங்கிலாந்து வென்றால் தொடரைக் கைப்பற்றும்.
ஆட்ட நாயகனாக டேவிட் மலான் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago