இனிமேல் மஞ்சள் ஆடை அணிவாரா? சிஎஸ்கே அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையிலான பந்தம் முறிந்ததா?

By பிடிஐ


ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இனிமேல் மஞ்சள் ஆடை அணிவாரா, அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால், அடுத்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையிலான 12 ஆண்டு உறவு முறியும் கட்டத்துக்கு வந்துவிட்டதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

13-வது ஐபிஎல்டி20 சீசன் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கடந்தவாரம் திடீரென தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரின் உறவினர் ஒருவர் பஞ்சாப் மாநிலம் பதான்காோட்டில் கொள்ளையர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரின் மனைவி மகன்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதால்தான் அவர்களைக் காண்பதற்காக ரெய்னா தொடரிலிருந்து விலகினார் என கூறப்பட்டது.

ஆனால், துபாயில் சிஎஸ்கே அணியினர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் பால்கனியுடன் கூடிய சூட் அறை தோனிக்கு வழங்கப்பட்டதைப் போல் தனக்கும் வழங்கப்படவில்லை என்பதால், அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலில் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து விலகினார் என்று தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்றார்போல் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், “ வெற்றி மமதை தலைக்குஏறி ரெய்னா இருக்கிறார். தோனியிடம் பேசினேன், எத்தனை பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படத்த தேவையில்லை எனக் கூறிவிட்டார். நான் அனைத்து வீரர்களிடம் பேசிவிட்ேடன், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்.

இந்த தொடர் இன்னும் தொடங்கவில்லை. ரெய்னா நிச்சயம் மிகவும் வருத்தப்படப் போகிறார், ஏனென்றால், இந்த சீசனில் அவர் விளையாடாமல் இருந்தால் ரூ.11 கோடி இழப்பைச் சந்திப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையேலான மோதல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கெனவே சிஎஸ்கேஅணியில் பந்துவீச்சாளர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் ரெய்னாவும் தொடரில் இல்லாதது பெரும் பின்னடைவாகக்கூட இந்த சீசனில் அந்த அணிக்கு அமையக்கூடும்.

ஆனால், ஐபிஎல் வட்டாரங்கள் கூறுகையில் “ துபாயில் சிஎஸ்கே அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் சுரேஷ் ரெய்னா நடந்து கொண்டவிதம் அணி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அதனால்தான் அணியின் நிர்வாகி ஸ்ரீனிவாசன் காட்டமாக அறிக்கை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

சிஎஸ்கே அணியின் விதிப்படி, பயிறச்சியாளர், கேப்டன், மேலாளர் ஆகிய 3 பேருக்கு மட்டுமே பால்கனியுடன் கூடிய சூட் சொகுசு அறை ஒதுக்கப்படும். ஆனால், ரெய்னா தனக்கு சூட் அறை வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதாவது தனது அறையில் பால்கனி இல்லை, தோனி அறையில் பால்கனி இருப்பதால் அதோபோன்று வேண்டும் என ரெய்னா கேட்டுள்ளார்.

இதை பெரிதாக எடுத்துக்கொண்டு ரெய்னா கோபப்பட்டுள்ளார். மேலும், அணி நிர்வாகமும் ரெய்னாவிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

இதனால்தான் மோதல் முற்றி தொடரிலிருந்து விலகுவதாக ரெய்னா அறிவித்தார். இனிமேல் இந்த தொடரில் ரெய்னா விளையாடுவதற்கான சாத்தியங்கள் இல்லை எனத் தெரிகிறது.

இந்த சீசனில் மட்டுமல்ல அடுத்த சீசனிலும் சின்ன தலை ரெய்னா விளையாடமாட்டார் என்றே தெரிகிறது. அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் பெரிய பாதிப்பை ரெய்னாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முழுஅளவிலான ஏலம் நடக்கும் என்பதால், ரெய்னாவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆர்வம் காட்டாவிட்டால், மஞ்சள் ஆடையை இனிமேல் ரெய்னா அணியமாட்டார்” எனத் தெரிவிக்கின்றன.

ஒருவேளை சிஎஸ்கே நிர்வாகம் ரெய்னாவுடன் சமாதானம் பேசினால், மீண்டும் இந்தத் தொடரில் ரெய்னா விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என ஐபிஎல்வட்டாரத்தில் கேட்கப்பட்டது.

அதற்கு, “ இந்த சீசனில் ரெய்னா விளையாடுவது முற்றிலும் சந்தேகம், ஏனென்றால், சிஎஸ்கே நிர்வாகம் தெளிவாக அறிக்கை வெளியிட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்துடன் மோதலும் வெளிவந்துவிட்டதால், இந்தத் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம்தான்.

அடுத்த ஆண்டு ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரெய்னாவை எடுக்கலாம் அல்லது வேறு அணிக்கும் கூட ரெய்னா செல்லலாம். இதுவரை ரெய்னாவுக்கு மாற்று வீரராக எந்த வீரரையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

ரெய்னா இனிமேல் மன்னிப்புக் கேட்டாலும் அவர் அணிக்குள் வருவதற்கான சூழல் இல்லை. அவருக்கு பதிலாக கெய்க்வாட்டை தயார் செய்யும் பணியை சிஎஸ்கே அணி தொடங்கிவிட்டது.” எனத் தெரிவித்தனர்.

ரெய்னாவுக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அவர் களமிறங்கும் இடத்தில் இறக்க சிஎஸ்கே அணி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய இளம்வீரர், உள்ளூர் போட்டிகளிலும் இந்திய ஏ அணியிடும் நல்ல ஸ்கோர் செய்ததால், ரெய்னா இடத்தில் கெய்க்வாட் இறக்கப்படலாம்.

இதனால் சிஎஸ்கே அணியுடன் 10 ஆண்டுகள் பந்தம் ரெய்னாவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்ற கூறப்புடகிறது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் 164 போட்டிகளில் ஆடி அதிகட்சமாக 4,527 ரன்களைக் குவித்தவர் சுரேஷ் ரெ்யனா. ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலிக்குஷ்ர(5,412) அடுத்தார்போல் 2-வது அதிகபட்சமாக 5,368 ரன்களை குவித்தவர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்