பெங்களூருவில் சிஎஸ்ஐஎப் வீரர்களுக்கு கரோனா கவச ஆடையை நன்கொடையாக அளித்த கே.எல்.ராகுல்

By பிடிஐ

இந்திய அணி வீரரும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் பெங்களூரு விமானநிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினருக்கு கரோனா கவச ஆடை(பிபிஇ) நன்கொடையாக வழங்கிவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 30 லட்சத்தைக் கடந்துள்ளது 55 ஆயிரம் மக்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இன்னும் கரோனா தாக்கம் குறையவில்லை. கரோனா வைரஸைக் காரணம் காட்டி இந்த முறை ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரக்தில் நடத்தப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 19 ம்தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை நடக்கிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் முன், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழிற்படை பாதுகாப்புப் படையினருக்கு கரோனா தடுப்பு உடைகளை (பிபிஇஆடைகள்) இலவசமாக வழங்கினார்.

இதுகுறித்து கே.எல். ராகுல் கூறுகையில் “ நம்மை விமானநிலையத்தில் இரவு பகலாக சிஎஸ்ஐஎப் பிரிவு படையினர்தான் பாதுகாக்கிறார்கள். கரோனா காலத்தில் தங்களின் வாழ்க்கையை இடருக்கு உள்ளாக்குவதால் தான் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

நான் ஆடைகளை வழங்கியது என்னுடைய கடமை மட்டுமல்ல, சிஐஎஸ்எப் வீரர்களை பாதுகாப்பாகவும், வசதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டி பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. என்னுடைய சின்ன பரிசு அவர்களுக்கு வழங்கியிருக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.

கரோனா காலத்தில் முன்களப்பணியாற்றும் மருத்துவர்கள்,காவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏராளமான உதவிகளை விளையாட்டு வீரர்கள் ப லர் செய்துள்ளார்கள், அதில் ராகுலும் அடங்குவார்.

பொதுவாக ராகுல் இரக்க குணம் உடையவர் சத்தமில்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். உலகக் கோப்பைப் போட்டியின் தான் பயன்படுத்திய கிரிக்கெட் கிட், ஆடைகள் போன்றவற்றை ஏலத்துக்கு விட்ட ராகுல், அதன் மூலம் கிடைத்த பணத்தை தாலசிமியா நோயாளிகள் நலனுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்