ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்பு கூறப்பட்ட நிலையில் அவர்கள் ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருந்துவருவதால் அது தேவையில்லை என்று ஆர்சிபி அணியின் நிர்வாகத் தலைவர் சஞ்வீ சுரிவாலா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை 13-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டு ெசல்கின்றன.
இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 29 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் முதல் சில போட்டிகளுக்கு பங்கேற்முடியாத சூழலில் இருப்பதாக தகவல் வெளியானது.
அதாவது செப்டம்பர் 4-ம் தேதி முதல் 16-ம் தேதி முதல் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் சவுத்தாம்டன், மான்செஸ்டரில் நடப்பதால், அந்த தொடர் முடிந்துதான் ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்களும் பங்கேற்க முடியும்.
இங்கிலாந்து பயணம் செல்லும் ஆஸ்திரேலிய அணி சவுத்தாம்டனில் செப்டம்பர் 4,6,8 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளிலும், மான்செஸ்டரில் 11, 13, 16 தேதிகளில்ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது.
இந்த தொடரை முடித்துக்கொண்டு, இரு அணிகளைச் சேர்ந்த ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றவீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டெம்பர் 17 அல்லது 18-ம் தேதிதான் வந்து சேர்வார்கள்.
அதன்பின் இரு நாட்டு அணியினரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்த 6 நாட்களில் இரு நாட்டு வீரர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முதல்நாள், 3-ம் நாள் 6-ம் நாள் எடுக்கப்படும். அதில் நெகட்டிவ் வந்தபின்பு 7-வது நாள் பயிற்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படிருந்தது.
இதனால் சில போட்டிகளில் ஆஸி, இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல் போட்டி நடந்தால் சுவாரஸ்யம் குறைந்துவிடலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் தலைவர் சஞ்சீவ் சுரிவாலா நிருபர்களிடம் கூறுகையில் “ இங்கிலாந்திலிருந்து வரும் இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள் யாரும் ஐக்கிய அரபு அமீரகம் வந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம். முதல் போட்டியிலிருந்தே விளையாடலாம்.
ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட சூழலில் இருந்துதான் வருகிறார்கள். மேலும், அவர்கள் அனைவரும் தனி விமானத்தில் அழைத்துவருவதால், எந்த விதமான சிக்கலும் இல்லை.
அதேசமம், பிசிசிஐயின் வழிகாட்டி நெறிமுறைகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முன் வீரர்களிடம் கடைபிடிக்கப்படும். வீரர்களுக்கு முறைப்படி கரோனா பரிசோதனை நடத்தப்படும், அதில் சமரசம் இல்லை, பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் கிடையாது.
இந்தத் திட்டம் சரியாக நடந்தால், அனைத்து வீரர்களும் அந்தந்த அணியில் முதல் போட்டியிலிருந்தே விளையாடுவார்கள். இல்லாவிட்டால், 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டபின்புதான் போட்டியி்ல் பங்கேற்க முடியும்.
மேலும், வீரர்கள் விமானப்பயணத்துக்கு வருவதற்கு முன் 96 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என ஐக்கியஅரபுஅமீரகம் அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு தனியாக விமானம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் 22-ம் தேதி இந்தியா வந்துவிடுவார்கள். இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள் செப்டம்பர் 17ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதி இலங்கை வீரர்களும் வந்துவிடுவார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் 155 அறைகளையும் முன்பதிவு செய்துள்ளோம். வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. உடற்பயிற்சிக் கூடம், ரெஸ்டாரன்ட், திரையரங்கு என அனைத்தும் இருக்கிறது”
இவ்வாறு சுரிவாலா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago