மே.இ.தீவுகள் தரவ்பாவில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் முதல் போட்டியை ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியிடம் இழந்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நேற்றைய வெற்றி மூலம் சரிகட்டியது.
செயிண்ட் கிட்ஸ் அணி முதலில் பேட் செய்து கீமோ பாலின் அபாரப் பந்து வீச்சுக்கு 127 ரன்களுக்கு சுருண்டது, தொடர்ந்து ஆடிய கயானா வாரியர்ஸ் அணி 17 ஓவர்களில் 131/7 என்று வெற்றிபெற்றது.
அதிரடி வீரர் ஹெட்மையர் 3 சிக்சர்கள் 8 பவுண்டரிகளை விளாசினார்.
டாஸ் வென்ற வாரியர்ஸ் முதலில் செயிண்ட் கிட்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. எவின் லூயிஸ் நவீன் உல் ஹக்கின் 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 18 ரன்கள் எடுத்தாலும் கிட்ஸ் அணி தடுமாற்றம் நிற்கவில்லை.
இம்ரான் தாஹிர் வந்தவுடன் கிறிஸ் லின் 16 ரன்களில் காலியானார். அதன்பிறகு கிறிஸ் கிரீன் சாதுரியமான பந்து வீச்சில் நிகோலஸ் பூரனின் அபாரமான விக்கெட் கீப்பிங் திறமையில் எவின் லூயிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பேட்ரியட்ஸ் அணி பவர் ப்ளேயில் 54/2 என்று இருந்தது. அதன் பிறகு வாரியர்ஸ் பிடியை இறுக்க 3 ஓவர்களுக்கு பவுண்டரிகளே இல்லை. இந்த அழுத்தத்தில் தினேஷ் ராம்தின், பிறகு ஜமார் ஹேமில்டன் வெளியேறினர்.
செயிண்ட் கிட்ஸ் அணி 83/5 என்று தடுமாறிய போது பென் டன்க் (29), ரயாத் எம்ரிட் (17), சில ஷாட்களை ஆடினர், ஆனால் பவுண்டரிக்ள் அரிதாகவே வந்தன. ரன்கள் மந்தமானது ஆனால் விக்கெட்டுகள் ரெகுலராக விழுந்து கொண்டிருந்தது. பேட்ரியட்ஸ் அணி 127/8 என்று முடிந்தது. கீமோ பால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இம்ரான் தாஹிர் 18 ரன்களுக்கு 2 விக்கெட்.
வாரியர்ஸ் அணி 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது பிரண்டன் கிங் 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார். ஆனால் சல்யூட் பவுலர் ஷெல்டன் காட்ரெல் கடைசியாக பிரண்டன் கிங்கை வெளியேற்றி சல்யூட் அடித்தார்.
ஆனால் ஹெட்மையர் இறங்கியவுடன் ஆட்டத்தின் போக்கு மாறியது வெளுத்துக் கட்டினார். பவுண்டரிகள் பறந்தன சிக்சர் ஒன்று ஸ்கோர்போர்டைப் பதம் பார்த்தது. பவர் ப்ளேயின் போது வாரியர்ஸ் 54/1 என்று இருந்தது. ஹெம்ராஜ் 8வது ஓவரில் ரன் அவுட் ஆனார்.
ஹெட்மையருக்கு கெய்ரன் போவெல் கேட்சை விட்டார். அடுத்த பந்தையே நேர் பவுண்டரிக்கு அனுப்பி கேட்ச் விட்டதைக் கொண்டாடினார் ஹெட்மையர்.
இஷ் சோதியை ஒரு மிகப்பெரிய நேர் சிக்ஸ் அடித்து ஹெட்மையர் 2 போட்டிகளில் 2வது அரைசதம் எடுத்தார். இது 31 பந்துகளில் எடுக்கபட்டது.
ஆனால் திடீரென செயிண்ட் கிட்ஸ் பேட்ரியட்ஸ் அணியின் ரயாத் எம்ரிட் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நிகோலஸ் பூரனை டக்கில் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். ஹெட்மையர் டிரேக்ஸ் பந்தில் டன்க்கின் பிரமாத கேட்சுக்கு வெளியேறினார். ஆனால் இலக்கு 128 என்பதால் இலக்கு 3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் எட்டப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago