ஹண்ட்ரட் தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணிக்கு விளையாட இந்திய நட்சத்திரம் தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸி. ஸ்பின் மேதையுமான ஷேன் வார்ன்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் பணமழை தனியார் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் களம் காண்கிறார்.
ஓய்வு பெற்ற பிறகான தன் பணிகள் குறித்து தோனி ஒன்றும் சொல்லாத நிலையில், அவருக்கு பல்வேறு டி20 லீகுகளிலிருந்தும் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஹண்ட்ரட் தொடரின் லண்டன் ஸ்பிரிட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஷேன் வார்ன், தோனி தன் அணிக்கு ஆட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
» இது போதும்! டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் - 2006-லேயே தோனி கூறியதாக லஷ்மண் ருசிகரம்
இது தொடர்பாக ஷேன் வார்ன், ஸ்கை ஸ்போர்ட்ஸ் தளத்துக்கு கூறும்போது, “அடுத்த ஆண்டு தோனியை லண்டன் ஸ்பிரிட் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று சிந்தித்து வருகிறேன். ஓகே எம்.எஸ். நீங்கள் ஐபிஎல் தொடருக்கு வெளியே ஆட விரும்பினால் லண்டன் ஸ்பிரிட் அணி உங்களை வரவேற்கிறது. நான் உங்களுக்கான தொகைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அனைத்து வகையான இந்திய கிரிக்கெட், ஐபிஎல் உட்பட ஓய்வு பெற்றால்தான் வெளிநாடுகளில் தனியார் லீகில் தோனியினால் ஆட முடியும், இது பிசிசிஐ விதி.
ரெய்னாவும் வெளிநாட்டு லீகுகளில் ஆட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு ஆட்சேபணையின்மை சான்றிதழ் வேண்டும் என்றால் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டையும் துறக்க வேண்டும்.
தி ஹண்ட்ரட் தொடர் 2021ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago