கேப்டன் கூல் தோனி சர்வதேத கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருப்பது, கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாது, இந்தியாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனிக்கு இத்தனை ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்தார்கள் எனக் கேட்க வைக்கும் அளவுக்கு கருத்துக்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மாநில முதல்வர்களும் தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் போட்டியிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றிருந்த தோனி, சர்வதேச டி20, ஒருநாள் போட்டிகளிலிருந்தும் முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று அவரின் இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டார். இதை பிசிசிஐ அமைப்பும் ஏற்றுக்கொண்டது.
தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
» ‘முதல் நாள் செய்த பிரியாணி போதும்’- தோனி தன் வீட்டுக்கு வந்த நாளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூரும் ஓஜா
மத்திய அமைச்சர் அமித் ஷா:
லட்சக்கணக்கான ரசிகர்களுடன் நானும் சேர்ந்து தோனி இந்தியகிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரின் பொறுமையான குணம், பரபரப்பான சூடான ஆட்டங்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. அவரின் தலைமையில் இருவிதமான உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றது. தோனி தனக்கே உரிய ஸ்டைலில் லட்சக்கணக்கான ரசிகர்களை மயக்கிவைத்தார்.
இந்தியக் கிரக்கெட்டை வலிமைப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பு செய்வார் என நம்புகிறோம். எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள், ஹெலிகாப்டர் ஷாட்டை இழந்துவிட்டோம்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
கிரிக்கெட்டுக்கும் எனக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது, தோனியைக் கேப்டனாக நியமித்ததும் நான்தான். சிறந்த கேப்டனாக வருவார் என நாங்கள் நம்பினோம். கிரிக்கெட்டுக்கு தோனி அளித்த பங்களிப்பு தனித்துவமானது, உத்வேகம் அளிக்கக்கூடியது, அவரின் சாதனைகள் சிறப்பானது. அவரின் எதி்ர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி, இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவரின் எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துகள்.
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்
தோனி கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, சிறுநகரங்கள், கிராமங்களில் இருந்து வரும் கோடிக்கணக்கான இளைஞர்களை பெரிதாக சாதிக்க வைக்க நினைக்கும் துணிச்சல், நம்பிக்கை. தோனியின் வாழ்விலிருந்து ஒவ்வொருவரும் லட்சியமுள்ள இந்தியரும் கற்க வேண்டும். ஒருபோதும் தாமதமாகவில்லை.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
சிறப்பாக விளையாடினீர்கள் தோனி. உங்களின் திறமை, தலைமைப்பண்பு ஆகியவை உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் பெயர் உச்சத்துக்கு சென்றது. ஒவ்வொரு இந்தியரும் உங்களால் பெருமைப்படுகிறோம். அடுத்த இன்னிங்ஸ்கிறகு எனது வாழ்த்துகள்
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
அனைத்து இனிமையான நினைவுகளுக்கும் தோனிக்கு நன்றி. உங்களின் நம்பிக்கை, தன்னம்பிக்கை, துணிச்சல், கடின உழைப்பு வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையட்டும்.
சசி தரூர் எம்.பி.
உங்களின் ஓய்வு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். கிரிக்கெட்டின் உண்மையான விஸ்வரூபம், சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன், மாற்றத்தை வரவேற்கும் கேப்டன், இந்தியக் கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதித்துவிட்டு சென்றுள்ளார் தோனி. தோனியின் காலத்தை ஒரு சகாப்தம் எனக் குறிப்பிடலாம்.
ஜோதிர்ஆதித்யநா சிந்தியா
போற்றத்தகுந்த கிரிக்கெட் வாழ்க்கை தோனி. ஒரு ரசிகனாக, இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் படைத்த மைல்கல்லுக்கு பணிகிறேன். வாழ்த்துகள்
மல்யுத்தவீரர் சுஷில் குமார்
ஒவ்வொரு விளையாட்டுவீரரின் பயணத்துக்கும் ஒருநாள் முடிவு உண்டு. நாட்டுக்காக என்ன செய்தீர்கள் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் நிற்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரர்.
ஹாக்கிவீரர் ஸ்ரீஜேஸ்
எனக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் உண்மையான உந்து சக்தியாக, ஊக்கமாக திகழ்ந்தவர் மகிபாய். கைகளைக் கட்டிக்கொண்டு மகிபாய் ஓய்வுபெறும் ஸ்டைலும் தனிதான்.
ஜஸ்பிரித் பும்ரா
கிரிக்கெட்டில் எங்கெல்லாம் இளம் வீரர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு உத்வேகம், ஊக்கம் அளிப்பவர் மகி பாய். அது தொடரும், புதிய பயணத்தை நீங்கள் தொடர்கிறீர்கள். எதிர்காலம் சிறப்படைய வாழ்த்துகள்
முகமது கைஃப்
இனிமேல் 7-ம் எண் ஜெர்ஸியை யாரும் அணிவதை மீண்டும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மறக்க முடியாத நினைவுகளை வி்ட்டுச்சென்ற தோனிக்கு நன்றி. ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திக்கிறேன்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago