நம் மனங்களிலிருந்து தோனிக்கு ஓய்வு கிடையாது: காங். தலைவர் கபில் சிபல் புகழாரம்

By ஏஎன்ஐ

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் பிரியாவிடை குவிந்து வருகின்றன.

அரசியல் தரப்பிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் நம் மனங்களிலிருந்து ஓய்வு பெற மாட்டார் என்று தெரிவித்துள்லார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “எம்.எஸ்.தோனி தைரியமும் தீரமும் மிக்க கூல், அனாயாச மாவீரர், நம் மனங்களிலிருந்து அவர் ஓய்வு பெற மாட்டார், நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

தோனி நேற்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஓய்வு அறிவிக்கும் போது, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணியுடன் நான் ஓய்வு பெற்றதாகக் கருதுங்கள், என்று தெரிவித்திருந்தார்.

தோனி வங்கதேசத்துக்கு எதிராக 2004-ல் அறிமுகமானார். 350 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். கடைசியாக உலகக்கோப்பை 2019 அரையிறுதியில் ஆடினார், அதில் துரதிர்ஷ்டவசமாக அவர் மார்டின் கப்திலின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆக இந்தியா தோற்று வெளியேறியது.

தற்செயலாக அவர் தன் முதல் போட்டி கடைசி போட்டி இரண்டிலும் ரன் அவுட் ஆகியிருந்தார். மிகச்சிறந்த ரன்னர் ஆன தோனி முதல், கடைசி போட்டிகளில் ரன் அவுட் ஆகியிருப்பது ஒரு நகைமுரண்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்