‘தல’ என்று பிரியமுடன் ரசிகர்களால் அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி நேற்று இன்ஸ்டாகிராம் மூலம் ஓய்வு அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
அவரது பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி சாதனைகள் ஒருபுறம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தாலும் தோனி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பந்தும் வீசியுள்ளார்.
இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டையும் அவர் கைப்பற்றியுள்ளார். அது எப்போது என்றால் தென் ஆப்பிரிக்காவின் ஜொகான்னஸ்பர்கில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ்டிராபி ஒருநாள் தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 2009-ம் ஆண்டு எடுத்த ஒரே விக்கெட்டாகும்.
அந்த ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் வீரர் டிஎம்.டவ்லின் என்பவரை 14 ரன்களில் தோனி கிளீன் பவுல்டு செய்தார். மட்டையின் உள்விளிம்பில் பட்டு அது பவுல்டு ஆனது. அந்தப் போட்டியில் தோனி 2 ஓவர்கள் வீசி 14 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார் இதுதான் தோனியின் ஒரே விக்கெட்.
இந்தப் போட்டியில் 129 ரன்களுக்கு மே.இ.தீவுகள் சுருள, இந்திய அணி 32.1 ஓவர்களில் 130/3 என்று வென்றது. விராட் கோலி 79 ரன்களை விளாசினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago