சுரேஷ் ரெய்னா : காஸியாபாத் தூசித் தெருக்களிலிருந்து ஒரு தைரியன்

By செய்திப்பிரிவு

33 வயது சுரேஷ் ரெய்னா அவசரப்பட்டு ஓய்வு அறிவித்து விட்டார். உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தின் தூசி நிரம்பிய தெருக்களிலிருந்து இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு தைரியன் ரெய்னா.

குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு சக்தி. இவரிடம் உத்தி ரீதியாக சிக்கல்கள் இருந்தாலும் ஆட்டத்தில், களத்தில் அது தெரியாத வண்ணம் தன் தைரியத்தால் மீண்டு வருபவர்.

இவரது உச்ச நாட்களில் அதிர்வுடனும், சுறுசுறுப்புடனும், அதிரடியுடனும் ஒரு மேட்ச் வின்னிங் வீரராக இந்திய அணியில் திகழ்ந்தார்.

ரெய்னாவின் வெற்றிக்குக் காரணம் அவரது பேட் சுழலும் வேகம், கால்நகர்த்தல் ஆகியவையே, இதுதான் அவருக்கு 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 93.50 ஆகும்.

ஏகப்பட்ட இருதரப்பு ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுத்துள்ளார். 2011 உலகக்கோப்பையில் இவரது பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. அதுவும் காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு விறு விறு, குறு இன்னிங்ஸை ஆடியிருப்பார், அதிலும் பிரெட் லீயை நேராக அடித்த சிக்ஸரை மறக்க முடியாது.

அதே போல் எம்.எஸ்.தோனியும் இவரும் சேர்ந்து ஆடிய ஒருநாள், டி20 போட்டிகளின் தருணங்களையும் மறக்க முடியாது.

டி20 கிரிக்கெட்டிலும் ரெய்னா ஒரு ஆட்கொள்ளப்பட வேண்டிய சக்திதான். நல்ல சுறுசுறுப்பான பீல்டர். அணிக்கு ஒரு மதிப்பு மிக்க வீரர் ரெய்னா. 78 டி20 போட்டிகளில் 1,605 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் பிரமாதமான 134.87.

கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது அவருக்குப் பிடித்த வீரராக இருந்தார் சுரேஷ் ரெய்னா. கபில்தேவுக்குப் பிறகு ஆட்டத்தின் போக்கை விரைவுகதியில் இந்தியா பக்கம் மாற்றக்கூடியவர். சில வேளைகளில் இவரது பந்து வீச்சும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

2010-ல் தனது டெஸ்ட் கரியரை இலங்கைக்கு எதிராக 120 என்ற சதத்துடன் தொடங்கினார். பாதுகாப்பான உத்தியைக் கொண்டவராக இருந்தாலும் ஷார்ட் பிட்ச் பவுலிங் என்றால் இவருக்கு சரியாக ஆட வராது, கடைசி வரை அதை ஆட்கொள்ள அவர் முடியவில்லை, அவரும் முயற்சி செய்யவில்லை. கடைசியில் 18 டெஸ்ட் போட்டிகளில் 768 ரன்களுடன் முடிந்தார்.

ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் 109 போட்டிகளில் 6871 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 204 நாட் அவுட். சராசரி 42.15. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 302 போட்டிகளில் 8078 ரன்கள் 7 சதங்கள் 55 அரைசதங்கள். அனைத்து டி20களிலும் சேர்த்து 319 போட்டிகளில் 8392 ரன்கள். 4 சதங்கள் 51 அரைசதங்கள்.

டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 36, டி20-யில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் மொத்தம் 167 கேட்ச்களை எடுத்துள்ளார். கடைசியாக 2018-ல் டி20-யில் ஆடினார்.

சமீபத்தில்தான் மீண்டும் இந்திய அணிக்கு வர விருப்பம் என்று தெரிவித்திருந்தார். 4ம் நிலையில் திணறும் இந்திய அணிக்கு ரெய்னா இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது, எங்கோ அணித்தேர்வுக்குழுவினர் ரெய்னாவை தவற விட்டு விட்டனர், அவரது வெறுப்பும் நியாயமானதே.

- தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்தில் எஸ்.தினகர் எழுதிய கட்டுரையின் ஒரு வடிவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்