நடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்ட்டில் புதிய முறை அறிமுகம்

By பிடிஐ

கிரிக்கெட்டில் எத்தனையோ முறை நடுவர்கள் பவுலரின் முன் கால் கிரீசை தாண்டி செல்லும் நோ-பால்களைப் பார்க்காமல் விட்டுள்ளனர், இதனால் பேட்ஸ்மென்கள் பலர் அநியாயமாக ஆட்டமிழந்து சென்றுள்ளனர்.

இத்தகைய தன்முனைப்பற்ற அநீதியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று தொடங்கிய இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் டிவி நடுவர் நோ-பால் அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது நன்றாகக் கைகூடினால் இனி வரும் அனைத்துப் போட்டிகளுக்கும் இந்த முறை கையாளப்படும். ஏற்கெனவே நடுவருக்கு அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக போய் வரும் இந்த ஆட்டத்தில் நோ-பாலும் அவர்கள் அதிகாரத்திலிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் இதன் மூலம் வரும் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்து எதிர்காலப் போட்டிகளுக்கும் இந்த முறை அறிமுகம் செய்யப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து, அயர்லாந்து ஒருநாள் தொடரில் 3வது நடுவர் நோ-பால்களை கவனித்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு இந்தியா-மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்த முறை பரிசோதிக்கப்பட்டது. உலக மகளிர் டி20 கோப்பைப் போட்டிகளிலும் முயற்சி செய்யப்பட்டது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இதுவே முதல் முறை.

இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரின் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட தொடர் இன்று மான்செஸ்டரில் தொடங்கியது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து இதுவரை விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது, ஷான் மசூத், அபிட் அலி ஆடிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்