கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை ‘மன்கட்’ முறையில் பவுலிங் வீசாமலேயே ரன்னர் முனையிலேயே ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சைக்குள்ளானது.
பட்லரை இப்படி வீழ்த்திய பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 108/1 என்ற நிலையிலிருந்து சரிந்து தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
அன்று முதல் தான் செய்ததை பல்வேறு விதங்களில் அஸ்வின் நியாயப்படுத்தியே பேசி வருகிறார் என்பது ஒரு புறம் இருந்தாலும் மீண்டும் ஐபிஎல் தொடங்கவிருக்கும் போது அந்தச் சம்பவத்த்துக்கு வேறு ஒரு புதிய நியாயப்பாட்டை வழங்கியுள்ளார் அஸ்வின்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நெருக்கடி அணி கேப்டன்களுக்கும், பயிற்சியாகளர்களுக்கும் வீரர்களுக்கும் உள்ளது. இதை மறுக்க முடியாது, அதுவும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் சமரசமற்ற இந்தப் போக்கை அதன் முன்னாள் பயிற்சியாளர் சிலர் எடுத்தியம்பியுள்ளனர்.
» கங்குலிக்கு முன்னதாகவே தோனியைக் கண்டுப்பிடித்த முன்னாள் வீரர்: தினேஷ் கார்த்திக் பகிர்வு
அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பவுலர் பந்தை வீசும் முன்னரே பேட்ஸ்மென் கிரீசை விட்டு நகர்ந்து வெளியே செல்வதை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்படிச் செய்தால் அதன் மூலம் எடுக்கும் ரன்கள் கிடையாது என்று தீர்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்து எடுக்கும் ரன்னை அனுமதிக்கக் கூடாது.
என
இதன் மூலம் முன் கிரீஸ் விவகாரத்தில் பவுலருக்கு ஒருவிதி, பேட்ஸ்மெனுக்கு ஒரு விதி என்ற பாரபட்சம் களையப்படும்.
உங்களில் பலர் இதில் உள்ள பாரபட்சத் தன்மையை கவனிக்க மாட்டீர்கள். நான் விளக்குகிறேன், ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலிங் போடும் முன்பே 2 அடி முன்னால் செல்கிறார், இதனால் 1 ரன் இரண்டு ரன்னாக மாற்றப்படுகிறது என்றால் அடுத்த பந்தும் அதே பேட்ஸ்மென் தான் ஸ்ட்ரைக்கில் இருப்பார்.
அதே பேட்ஸ்மென் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது அடுத்த பந்து நான்காகவோ, சிக்சராகவோ அடிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பவுலர் கணக்கில் 7 ரன்கள் ஆகி விடுகிறது. ஒரு ரன்னுக்குப் பதிலாக, ஒரு டாட் பாலுக்குப் பதிலாக இப்படி நடந்து விடுகிறது, வேறொரு பேட்ஸ்மென் அந்த கிரீசில் இருந்தால் டாட் பால் சாத்தியம்.
டெஸ்ட் போட்டியிலும் ஒரு பேட்ஸ்மென் தான் ஸ்ட்ரைக்கிலிருந்து விலகி ரன்னர் முனைக்கு வருவதற்கு ரன்னர் இப்படி 2 அடி முன் கூட்டியே முன்னால் நகர்ந்து ஒரு சிங்கிளை எடுக்க உதவலாம், மாறாக அந்த பேட்ஸ்மெனே ஆடினால் அவர் அவுட் ஆகக்கூடிய வாய்ப்பு கூட உள்ளது.
எனவே ரன்னர் முனை பேட்ஸ்மென் வீசும் முன்பு கிரீசை விட்டு வெளியேறினால் அதன் மூலம் எடுக்கப்படும் ரன்னை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு கூறியுள்ளார் அஸ்வின்.
(ஏஎன்ஐ தகவல்களுடன்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago