தோனிதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்கிறார் லான்ஸ் குளூஸ்னர்

By இரா.முத்துக்குமார்

முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் தோனிதான் என்று கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொள்வதையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறும் போது இதனை தெரிவித்தார்.

"ஆல்-ரவுண்டர்கள் இருக்கின்றனர், இல்லையென்று கூறவில்லை. ஆனால் நீண்ட ஆண்டுகள் என்ற அளவில் அவர்கள் நிரூபிக்க முடியவில்லை. ஜாக் காலீஸ், ஷான் போலாக் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென்களையும் சேர்க்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் மதிப்பு மிக்க ஆல் ரவுண்டர்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டர் என்று என்னைக் கேட்டால், என்னைப் பொறுத்தவரை அது எம்.எஸ்.தோனியே” என்றார்.

கோலியின் கேப்டன்சி திறமைக்கு பாராட்டு:

"இலங்கை தொடரில் அவர் புத்துணர்வு பெற்றுள்ளார். அவர் முன்னின்று வழிநடத்தினார், இதைத்தான் ஒரு கேப்டனிடமிருந்து அனைவரும் எதிர்பார்க்கின்றனர். பேட்ஸ்மேனாக உலகில் தலைசிறந்தவர்களுள் ஒருவர் கோலி. தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் திட்டமிடும்போது கோலி என்ற காரணியை விவாதிப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.

கோலி போன்ற ஒருவர் ஒரு வழிமுறையின் கீழ் வந்து இந்தியாவுக்காக சிறப்பாக ஆடுவது அந்நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்