2008-ம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது. சிட்னி டெஸ்ட்டில் நடுவர்களான ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவை ஜெயிக்க வைக்கவில்லை எனில் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தொடரை அனில் கும்ப்ளே 2-1 என்று கைப்பற்றியிருப்பார்.
ஆஸ்திரேலியாவில் நடுவர்கள் மோசடி செய்வது புதிதல்ல, ஆனால் நடுநிலை நடுவர்களே சில அதிர்ச்சி தரும் தீர்ப்புகளை இந்திய அணிக்கு எதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் அளித்தனர்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு கிட்டத்தட்ட 8 அவுட்கள் தரப்படவில்லை. கடைசி நாளில் கங்குலி, திராவிடுக்கு படுமட்டமான தீர்ப்பளிக்கப்பட்டது இந்தியாவுக்கு போட்டியையே இழக்கச் செய்தது. கங்குலிக்கு ஆஸி. கேப்டன் பாண்டிங்கே அவுட் கொடுத்தார். இதை ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நடுவர் மோசடிகளால் தாங்கள் வென்றதை மூடி மறைக்க ஹர்பஜன் சிங் மீது அனாவசிய சர்ச்சைகளைக் கிளப்பினர் ஆஸி. அணியினர்.
இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து நடுவர் ஸ்டீவ் பக்னர் தன் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
“நான் 2008 சிட்னி டெஸ்ட் போட்டியில் 2 தவறுகள் செய்தேன். (ஒன்றா, இரண்டா ஏகப்பட்ட தவறுகள் செய்தார்).
முதல் தவறு இந்தியா நன்றாக ஆடிக்கொண்டிருந்த போது ஆஸி. பேட்ஸ்மெனுக்கு அவுட் கொடுக்காமல் அவர் சதம் எடுத்தது. 5ம் நாளில் செய்த மற்ற தவறு. இது இந்தியாவுக்கு போட்டியையே பறித்தது.
இருந்தாலும் 5 நாட்களில் இரண்டு தவறுகள்தான். நான் மட்டும்தான் முதன் முதலில் டெஸ்ட்டில் தவறு இழைத்தேனா? ஆனாலும் இந்த 2 தவறுகள் என்னை இன்றும் என்னை அச்சுறுத்தி வருகிறது.
சப்தம் காற்றுடன் செல்வது. வர்ணனையாளர்களுக்கு பேட் எட்ஜ் கேட்கிறது. ஸ்டம்ப் மைக்கினால் அவர்களுக்குக் கேட்கிறது. ஆனால் நடுவர்கள் உறுதியாக இதில் செயலபட முடியாது. இவையெல்லாம் பார்வையாளர்களுக்குத் தெரியாது. ” என்றார்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ரிக்கி பாண்டிங் இருவருக்கும் எட்ஜ் எடுத்தது அது அவுட், ஆனால் இரண்டையும் மறுத்தார் ஸ்டீவ் பக்னர்.
இந்த டெஸ்ட் தோல்வி வெறியில், ஹர்பஜன் -சைமன்ட்ஸ் மன்க்கி கேட் விவகாரம் எல்லாம் ஒன்று சேர அடுத்த பெர்த் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்று ஆஸியைப் பழி தீர்த்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago