பல்வேறு அளவுகோல்களை முன் வைத்து யார் சிறந்த, அல்லது தாக்கம் ஏற்படுத்திய கேப்டன் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ நடத்திய ஒரு தேர்ந்த ஆய்வில் கங்குலியை நூலிழையில் முந்திய தோனி தாக்கம் நிறைந்த கேப்டனாகக் கணிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த புள்ளிகளில் தோனி வெற்றி பெற்றார், ஆனால் அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் கங்குலி தோனியைப் பின்னுக்குத் தள்ளினார். தான் கொண்டு வந்த வீரர்களுடன் அணியை வளர்த்தெடுத்தப் பிரிவில் தோனியை கங்குலி பலநிலையில் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.
இந்த ஆய்வில் முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், உலக அளவில் 8 நாடுகளிலிருந்து உள்ள ஒளிபரப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சி (உள்நாடு, வெளிநாடு), வெள்ளைப்பந்து கேப்டன்சி, பேட்டிங் சாதனை, அணியை வளர்த்தெடுத்தது, கேப்டன்சிக்குப் பிறகு விட்டுச் சென்ற அணியின் தரம், இவர்களின் சாதனை, இருவரது ஒட்டுமொத்த தாக்கம்.
» ஹீரோவான ஜெர்மைன் பிளாக்வுட் அபாரம்; 2000-ம் ஆண்டுக்குப் பிறகு... மே.இ.தீவுகள் அபார வெற்றி
இதில் ஒட்டுமொத்தமாக கங்குலியைக் காட்டிலும் தோனி 0.4 புள்ளிகள் அதிகம் பெற்று நூலிழையில் வென்றுள்ளார்.
உள்நாட்டில் கங்குலி 21 டெஸ்ட்களில் கேப்டனாக ஆடியதில் 10-ல் வெற்றி பெற தோனி 30 டெஸ்ட்களில் 21 டெஸ்ட்களில் வென்றுள்ளார். வெளிநாடுகளில் 29 டெஸ்ட்களில் கங்குலி 11ல் வென்று 10-ல் தோல்வி தழுவ, தோனியோ 30 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 6-ல் மட்டுமே வென்று 15-ல் தோல்வி தழுவியுள்ளார்.
உள்நாட்டு டெஸ்ட் தொடர் சாதனைகளில் தோனி இந்த சர்வேயில் 8.2 புள்ளிகள் பெற கங்குலி 7.4தான் பெற்றார். ஆனால் வெளிநாட்டுத் தொடர்களில் கங்குலி 7.2 புள்ளிகள் பெற தோனி 5.5 புள்ளிகளுடன் பின் தங்கினார்.
ஒருநாள் கேப்டன்சியில் அதிக வெற்றிகளுடன் தோனி 8.1 என்று முன்னால் செல்ல கங்குலி 6.8 என்று பின் தங்கினார். ஆனால் அணியை உருமாற்றியதில் கங்குலி 8.6, தோனி 7.3.
அதே போல் நல்ல அணியை விட்டுச் சென்றதில் கங்குலி 7.8, தோனி 7.6.
கேப்டனாக பேட்டிங் சாதனைகளில் தோனி 7.8, கங்குலி 7.4.
சாதனைகளில் தோனி 8.5, கங்குலி 7.2
அணியின் மீதான ஒட்டுமொத்த தாக்கத்தில் கங்குலி 8.1 புள்ளிகள், தோனி 7.9.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago