சவுத்தாம்ப்டனில் கரோனா காலத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று மே.இ.தீவுகளின் பிராத்வெய்ட், விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச் அடித்த போராட்ட அரைசதத்தினால் மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இங்கிலாந்தைக் காட்டிலும் 114 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 10 ஓவர்கள் ஆடி 15/0. என்று உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் லெஜண்ட் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் ஆஃப் ஸ்பின்னர் பெஸ் 2 விக்கெட்டுகளையும் மார்க் உட் 1 விக்கெட்டையும் கைப்பற்ற அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் சொதப்பிவிட்டார், விக்கெட் எதையும் அவரால் கைப்பற்ற முடியவில்லை. பந்துவீச்சும் ஸ்விங் இல்லாமல் நேர் நேர் தேமாவாக இவருக்கு அமைந்தது.
பந்துகளை ஆடாமல் விட்டும், தடுத்தாடியும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் மே.இ.தீவுகள் ஒரு டெஸ்ட் பார்முலாவைக் கடைப்பிடித்து பேட்டிங் செய்தனர். ஷேய் ஹோப் ஆர்ச்சர் பந்தில் எல்.பி.ஆனார், ஆனால் அது நோ-பாலாக அமைந்தது.16 ரன்களில் ஷேய் ஹோப் ஆஃப் ஸ்பின்னர் பெஸ் பந்தை ஸ்லாஷ் செய்ய முயன்று ஸ்லிப்பில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பிராத்வெய்ட் தனது 18வது அரைசதத்தை 113 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் எட்டினார். ஆனால் 65 ரன்களில் அவர் ஸ்டோக்ஸ் பந்தில் கொஞ்சம் சந்தேகத்துக்குரிய வகையில் எல்.பி. தீர்ப்பாகி வெளியேறினார்.
ஷம்ரா புரூக்ஸ் (39 ரன்கள்) தன் 4வது டெஸ்ட்டில் தான் ஆடுகிறார், ஆனால் மிகவும் அனாயசமாக ஆடினார். முதல் 18 ரன்களை 17 பந்துகளில் எடுத்தார். உணவு இடைவேளையின் போது மே.இ.தீவுகள் 159/3 என்று இருந்தது.
புரூக்ஸ் 39 ரன்களில் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார். ஜெர்மைன் பிளாக்வுட், இவர் பொறுமையாக ஆடியிருக்க வேண்டிய நேரத்தில் பெஸ் பந்தை நேராக மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார். 186/5 என்று ஆனது மே.இ.தீவுகள்.
தேநீர் இடைவேளியின் போது மே.இ.தீவுகளின் முன்னிலை 31 ரன்களாக இருந்தது. ராஸ்டன் சேஸ் 115 பந்துகளில் 27 நாட் அவுட் என்று ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சினார்.
2017 தொடரில் 6 இன்னிங்ஸ்களில் இங்கிலாந்தில் வெறும் 24 ரன்களையே எடுத்து சொதப்பிய ஷேன் டவ்ரிச் இந்த முறை தான் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை உறுதியுடன் நிரூபித்தார். பெஸ் என்ற ஆஃப் ஸ்பின்னரை நேராக 3 பவுண்டரிகள் விளாசினார்.
235/5 என்ற நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு புதிய பந்தை எடுத்தது இங்கிலாந்து. ஜனவரி 1 2018 முதல் மே.இ.தீவுகளின் டாப் 5 வீரர்களை விட கீழ்வரிசை வீரர்கள் அதிகம் சராசரி வைத்துள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை சேஸ் கவர் பவுண்டரிக்கு அனுப்பி 115 பந்துகளில் டவ்ரிச்-சேஸ் கூட்டணி அரைசதம் சாதிக்கப்பட்டது.
ஆர்ச்சர், ஆண்டர்சன் மே.இ.தீவுகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தத் திணறினர். கூட்டணி ரன் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. அப்போது 142 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த ராஸ்டன் சேஸ் ஆண்டர்சன் பந்தில் எல்.பி.ஆனார். டி.ஆர்.எஸ். ஆண்டர்சனுக்குச் சாதகமாக அமைந்தது.
டவ்ரிச் 91 பந்துகளில் அரைசதம் எடுத்தார். சதம் எடுப்பேன் என்ற ஜேசன் ஹோல்டர் (5), ஸ்டோக்ஸ் ஷார்ட் பிட்ச் பந்தை சரியாக புல் ஆடாமல் ஃபைன்லெக்கில் ஆர்ச்சரிடம் கேட்ச் ஆனார். அல்சாரி ஜோஸப் (18), டவ்ரிச் (61 ரன்கள், 115 பந்து 8 பவுண்டரி) ஆகியோரை ஸ்டோக்ஸ் வீழ்த்தி தனது 150வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். மார்க் உட், ஷனன் கேப்ரியல் மிடில் ஸ்டம்பைப் பெயர்த்தார்.
மே.இ.தீவுகள் 318 ரன்கள். இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை மே.இ.தீவுகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago