ஆண்டர்சன் வீசினால் விரலை உயர்த்துவது, ஹோல்டர் என்றால் கையைக் கட்டிக்கொள்வது: இங்கி. நடுவர்களின் பாரபட்சம்

By இரா.முத்துக்குமார்

2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மே.இ.தீவுகளை எப்படி நடுவர்கள் ஒழித்தனரோ அதே பாணியில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் இங்கிலாந்து நடுவர்கள் செயல்பட்டனர்.

கரோனா காலமாகையால் நடுநிலை நடுவர்கள் அல்லாமல் இங்கிலாந்தின் உள்நாட்டு நடுவர்களான ரிச்சர்ட் கெட்டில்பரோ, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் முதல் டெஸ்ட் போட்டிக்கு நடுவர்களாகக் களமிறங்கினர். டிவி நடுவராக மைக்கேல் காஃப் பணியாற்றி வருகிறார்.

இதில் நடுவர்களின் செயல்பாடுகள் பெரிய கேள்விக்குறிகளை கிளப்பியுள்ளது, ஏனெனில் இங்கிலாந்து பேட் செய்த போது ரோரி பர்ன்ஸ், ஸாக் க்ராலி, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் கால்காப்பில் ஸ்டம்ப் லைனில் நெருக்கமாக வாங்கிய போது ஒருமுறை கப்ரியேலுக்கும் இருமுறை ஹோல்டருக்கும் நாட் அவுட் என்று கூறி மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் 3 முறையும் டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தியே அவுட் பெற வேண்டியிருந்தது. இங்கிலாந்து ஒருவழியாக 204 ரன்களுக்குச் சுருண்டது, ஹோல்ட 6 விக்கெட்டுகளை 42 ரன்களுக்குக்கைப்பற்றி தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சை சாதித்தார்.

மாறாக மே.இ.தீவுகள் பேட் செய்ய வந்தபோது 7வது ஓவரை ஆண்டர்சன் வீச கடைசிப் பந்து கேம்பலின் பின் கால்காப்பைத் தாக்கியது. நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் யோசிக்காமல் விரலை உயர்த்தினார். கேம்பல் ரிவியூ செய்ய பந்து லைனிலேயே இல்லை வெளியே பிட்ச் ஆகியது, இதைத்தான் முதலில் நடுவர் கவனிக்க வேண்டும் ஆனால் நடுவரோ கையை உயர்த்தினார்.

பிறகு 13வது ஓவரில் மீண்டும் ஆண்டர்சன் வீசிய பந்தை கேம்பல் ஆடாமல் விட கால்காப்பைத் தாக்கியது. உடனே கையை உயர்த்தினார் நடுவர், மீண்டும் கேம்பல் ரிவியூ செய்ய பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது.

அதே ஓவரில் 6வது பந்தில் மீண்டும் முன் காலைத் தாக்கியது பந்து, நடுவர் கையை உயர்த்தினார், மீண்டும் ரிவியூ, ஆனால் இம்முறை கேம்பலுக்கு அதிர்ஷ்டமில்லை. லெக் ஸ்டம்பைத் தாக்கியதாகக் காட்டியது டி.ஆர்.எஸ். ஆட்டமிழந்தார்.

ஆனால் மே.இ.தீவுகள் பவுலிங் செய்யும் போது ஒவ்வொருமுறையும் டி.ஆர்.எஸ். மூலம் எல்.பி பெற வேண்டியிருந்தது, பேட்டிங் செய்யும் போதும் டி.ஆர்.எஸ். உதவியுடன் தான் களநடுவர் தீர்ப்பை மாற்ற வேண்டியுள்ளது.

இது வெளிப்படையான பாரபட்ச அம்பயரிங் என்று அங்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன, எனவே மே.இ.தீவுகள் நடுவரை அழையுங்கள் என்று அங்கு குரல்கள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்