சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி உலகின் டாப் பேட்ஸ்மென்கள் ஆவார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள், பவுலிங்கில் சச்சின் டெண்டுல்கர் சில முக்கியமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கியமான சில விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்ட் பவுலர், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், மொஹீந்தர் அமர்நாத் பாணி மிதவேகப்பந்து வீச்சு என்று அசத்தியிருக்கிறார், 2001 புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் 2வது இன்னிங்சில் 3 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய வெற்றியில் தானும் ஒரு முத்திரைப் பதித்தார்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 201 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1991-92 தொடரில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அடுத்தடுத்து இவர் மார்க் டெய்லர், ஆலன் பார்டரை வீழ்த்த வர்ணையில் இருந்த பில் லாறி, “ஓ காட் ஹேட் செண்ட் திஸ் பாய் ஃப்ரம் ஹெவன்” என்று கூறியதை இன்றளவும் மறக்க முடியாது.
மாறாக விராட் கோலி ஒரு விதத்தில் பார்த்தால் நியூஸிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ் போல் ஆக்ஷனுடன் வீசக்கூடியவர், 8 சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கோலி.
இவர்கள் இருவரும் 3 முக்கியமான வீரர்களை சர்வதேச போட்டியில் வேறுபட்ட சந்தர்ப்பத்தில் வீழ்த்தியுள்ளனர்.
1. கெவின் பீட்டர்சன்: இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், இவரை சச்சினும் வீழ்த்தியுள்ளார் விராட் கோலியும் வீழ்த்தியுள்ளார். 2007 இங்கிலாந்து தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் ஓவலில் சச்சின் டெண்டுல்கர் பவுலிங் போட்டு 41 ரன்களில் இருந்த பீட்டர்சனை வீழ்த்தினார், ராகுல் திராவிட் ஸ்லிப்பில் கேட்ச் எடுத்தார்.
2011-ல் விராட் கோலி டி20 போட்டியில் மான்செஸ்டரில் கெவின் பீட்டர்சனை தன் பந்துவீச்சில் தோனி ஸ்டம்ப்டு செய்ய வீழ்த்தியுள்ளார். பீட்டர்சன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ஒரு வைடு பந்து என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
2. பாக். வீரர் முகமது ஹபீஸ்: 2005ம் ஆண்டில் பாகிஸ்தான் இங்கு ஆட வந்த போது கொச்சி ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இவரை வீழ்த்தினார். 42 ரன்களில் ஆஷிஷ் நெஹ்ரா கேட்ச் எடுக்க ஹபீஸ் சச்சினிடம் வீழ்ந்தார். இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 87 ரன்களில் வெற்றி பெற்றது, சச்சின் டெண்டுல்கர் வீழ்த்திய 5 விக்: ஹபீஸ், இன்சமாம், அப்துல் ரஸாக், ஷாகித் அப்ரீடி, முகமது ஷமி.
விராட் கோலி 2012 டி20 உலகக்கோப்பையில் ஹபீஸ் விக்கெட்டை காலி செய்தார். ஹபீஸ் பவுல்டு ஆனார். பாக் 128 ரன்களில் மடிய இந்தியா எளிதாக வென்றது.
3. பிரெண்டன் மெக்கல்லம்: இவரையும் சச்சின், விராட் கோலி இருவரும் பவுலிங்கில் வீழ்த்தியுள்ளனர். 2009 நியூஸி. தொடரில் வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 6 ரன்களில் மெக்கல்லமை சச்சின் வீழ்த்தினார், ராகுல் திராவிட் கேட்ச்.
அதே போல் விராட் கோலி ஜனவரி 2014 நியூஸி. தொடரில் 5வது ஒருநாள் போட்டியில் மெக்கல்லம் விக்கெட்டை அவர் 23 ரன்களில் இருந்த போது வீழ்த்தினார், கவரில் கேட்ச் எடுத்தது ரோஹித் சர்மா.
-தகவல் ஸ்போர்ட்ஸ் கீடா
முக்கிய செய்திகள்
விளையாட்டு
58 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago